என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிகட்ட மாணவர் சேர்க்கை"

    • மாணவர் சேர்க்கை வருகிற 20 மற்றும் 21--ம் தேதிகளில் நடைபெறுகிறது.
    • அனைத்து சான்றிதழ்களும் மூன்று நகல்களை கொண்டுவர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் இறுதிகட்ட மாணவர் சேர்க்கை வருகிற 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரியின் முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வருகிற 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அதன்படி, வருகிற 20-ம் தேதி காலை 10.30 மணியளவில் அறிவியல் பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கையும், 21-ம் தேதி காலை 10.30 மணியளவில் கலைப்பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கையும் நடை பெறும். விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

    மேலும், விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து அன்றே பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை நாளில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வின் போது, மாற்றுச்சான்றிதழ் (அசல்), மதிப்பெண் பட்டியல் (10, 11, 12-ம் வகுப்பு, அசல் சான்றிதழ்கள்), சாதிச்சான்றிதழ் (அசல்), வருமானச் சான்றிதழ் (அசல்), சிறப்பு பிரிவினரக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -4, ஆதார் அட்டை (நகல்), வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், சேர்க்கைக் கட்டணம் கலைப்பிரிவிற்கு ரூ.2485, அறிவியல் பிரிவிற்கு ரூ.2505 ஆகியவற்றுடன், அனைத்து சான்றிதழ்களும் மூன்று நகல்களை கொண்டுவர வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்துள்ளார்.

    ×