என் மலர்
நீங்கள் தேடியது "மூதாட்டி வீட்டில் நகை"
- 7 பவுன் நகை , ரூ.9,000 பணம் திருடு போயிருந்தது.
- நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. மத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் முண்டேப்பள்ளியை சேர்ந்தவர் கந்தம்மாள் (வயது 78). இவர் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் நகை , ரூ.9,000 பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து மத்தூர் போலீசில் கந்தம்மாள் புகார் செய்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யிடம் கந்தம்மாள் முறையிட்டார். இதைய டுத்து அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. மத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பே ரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






