என் மலர்
நீங்கள் தேடியது "பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்"
- அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- அனைத்து துறைத் தலைவர்களும், உதவி பேராசிரியர்களும், மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமையுரையில், பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு வித்தாக விளங்கினார். தமிழ்நாடு என்ற பெயரை சட்டபூர்வமாக அறிவித்தார் .தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கைக்குச் சட்டம் இயற்றினார் என்று பேசினார்.
கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியரும், நூலகருமான தனசீலன் தன்னுடைய சிறப்புஉரையில் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றினை மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சுரேஷ் குமார் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவின் சிறப்பு உரையில் மாணவ ,மாணவியர்கள் புத்தியைத் தீட்ட வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணப்பது போல மற்றவர்களையும் மதிக்க வேண்டும். கொள்கைகளை பின்பற்ற வேண்டும். துன்பம் உற்ற காலத்தில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் எனும் பேரறிஞர் அண்ணாவின் இலக்கிய சிந்தனைகளை மாணவர்களுக்கு கூறினார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் அனைத்து துறைத் தலைவர்களும், உதவி பேராசிரியர்களும், மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.






