என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த சிறுமிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடையேயான வருடாந்திர விளையாட்டு போட்டிகள்
- பள்ளி மாணவர்களுக்கு இடையேயான வருடாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- மாணவ மாண வியருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி மற்றும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையேயான வருடாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், போட்டிகளை, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் தொடங்கி வைத்தார்.
இதில், ஓசூர் தாலுக்காவை சேர்ந்த 22 அரசு பள்ளிகளிலிருந்து 490 மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாண வியருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் தொன்போஸ்கோ பள்ளி முதல்வர் எட்வர்ட் மைக்கேல், தூய நெஞ்சக் கல்லூரி துணை முதல்வர் சாம்சன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் பெர்னார்ட் கலந்து கொண்டனர்.






