என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பகுதியில் குட்கா பொருட்கள் கடத்திய 4 பேர் சிக்கினர்
- சூளகிரி போலீசார் நடத்திய சோதனையில் கோனேரிப்பள்ளி பகுதியை சேர்ந்த சந்திரப்பா (வயது 42), சுரேஷ் (30) ஆகியோர் குட்காவுடன் பிடிபட்டனர்.
- அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி குட்கா கடத்திய பலர் பிடிபட்டனர்.
சூளகிரி போலீசார் நடத்திய சோதனையில் கோனேரிப்பள்ளி பகுதியை சேர்ந்த சந்திரப்பா (வயது 42), சுரேஷ் (30) ஆகியோர் குட்காவுடன் பிடிபட்டனர். அவர்கள் போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் சிப்காட் போலீசார் நடத்திய சோதனையில் ஜூஜூவாடியில் ரூ.1 மதிப்பிலான 153 கிலோ போதை பொருட்களுடன் மதுரை அன்புநகரை சேர்ந்த அசோக் (40) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே பகுதியில் கண்டவுடன் 2 மர்ம நபர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பிவிட்டனர். அந்த காரையும் பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல தளி போலீசார் நடத்திய சோதனையில் யானைக்கால் சாலையில் 87 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சென்னையை சேர்ந்த சரவணன் (42),திருவள்ளூரை சேர்ந்த அமிர்தலிங்கம்(38) ஆகியோரை போலீசார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.






