என் மலர்
கிருஷ்ணகிரி
- ஒரு பிரிவிற்கு 8 போட்டிகள் என மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்பட்டது. .
- 500-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியினை நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் நேற்று குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
போட்டியின் துவக்கி நிகழ்ச்சிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி தலைமை வகித்தார். போட்டியை கிருஷ்ணகிரி நகர மன்றத் தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்து, விளையாட்டின் அவசியம் குறித்தும், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் மாணவியருக்கு எடுத்துரைத்தார்.
இதில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில், ஒரு பிரிவிற்கு 8 போட்டிகள் என மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.
15-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்ட னர். இதில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் ஏரி, குளம், குட்டைகள் நிறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன்படி நேற்று விநாடிக்கு 7,577 கனஅடி யாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 6,936 கனஅடி யாக குறைந்து வந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 6,443 கனஅடி தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றின் இருக்கரைகள் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும், அணைக்குள் தரைப்பாலம் மூழ்கிய தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால், அவ்வழியே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், பொதுப்ப ணித்துறை, வருவாய்த்துறை யினர் மற்றும் காவல்துறை யினர் மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்த னர்.
- வருகிற 21ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
- இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் கலந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் முதல்வர் அனுராதா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்) எம்.எஸ்சி., (கணிதம், இயற்பியல்,வேதியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த வர்களுக்கும், துணை தேர்வில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்த வர்களுக்கும் வருகிற 21ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வின்போது மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், நான்கு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் உள்ளிட்டவையோடு, கலை பிரிவுக்கு ரூ.1,750, அறிவியல் பிரிவுக்கு ரூ1,810, கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ.2010 என சேர்க்கை கட்டணத் தொகையும் எடுத்து வர வேண்டும். இவ்வாறு தனது செய்திக்கு றிப்பில் கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்து ள்ளார்.
- பிளாஸ்டிக் பைகள், கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- மாநகராட்சி குடோனுக்கு கொண்டு வரப்பட்டு சிறு, சிறு துண்டுகளாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஓசூர்,
ஓசூரில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை, அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் உள்ள 2 தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அனுமே பள்ளியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், ஓசூர் சுற்றுச்சூழல் துறை மாவட்ட பொறியாளர் வெங்கடேசன், மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் அஜிதா ஆகியோர் தலைமையில் உதவி சுற்றுச்சூழல் துறை பொறியாளர் சுமித்ராபாய், உதவி பொறியாளர்கள் ரங்கசாமி, தீதையாளன் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணி மேற்பார்வையாளர்கள் சீனிவாசன், கவுரிசங்கர் ஆகியோர் அடங்கிய அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு மற்றும் ரெய்டின் போது, சுமார் 15 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள், கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மின்இணைப்பை துண்டிக்கவும் , மேல் நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் லாரிகள் மூலம், ஓசூர் ஆனந்த நகரில் உள்ள மாநகராட்சி குடோனுக்கு கொண்டு வரப்பட்டு சிறு, சிறு துண்டுகளாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் இவை அரிய லூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- போட்டிகள் ஓசூர் அதியமான் கல்லூரியில் நடைபெற்றது.
- மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சூளகிரி,
சூளகிரி ஒன்றியம் உங்கட்டி அரசு உயர் நிலைப் பள்ளி ஓசூர் வடக்கு சரக அளவிலான விளையாட்டுப் போட்டி களை தலைமையேற்று நடத்துகிறது.
போட்டிகள் ஓசூர் அதியமான் கல்லூரியில் நடைபெற்றது. தடகளப் போட்டியில் உங்கட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் சிறப்பான முறையில் வென்று மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அந்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமாரையும் ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் முனிராஜ், கோவிந்தராஜ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- 32 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையாண்டாஹள்ளி ஏரி நிரம்பியுள்ளது.
- கால்வாய்கள் முழுவதும் பஞ்சாயத்து நிர்வாகத்தால் தூர்வாரப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயகோட்டை அடுத்து ஒடையாண்டஹள்ளி கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையாண்டாஹள்ளி ஏரி நிரம்பியுள்ளது.
ராயகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் ஒடயாண்டஹள்ளி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மழை நீர் பெருக்கெடுத்து கோடியூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையறிந்த ஓடையாண்டஅள்ளி வார்டு உறுப்பினர் பூபதி மற்றும் ஓடையாண்டாஅள்ளி ஊர் பொது மக்கள் சார்பாக கோடியூரில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் முழுவதும் பஞ்சாயத்து நிர்வாகத்தால் தூர்வாரப்பட்டது.
- மாணவர்களுக்கிடையே ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.
- கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டமும் காவேரிப்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் கிளை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கிடையே ரத்த வகை மாதிரி நிகழ்ச்சி மற்ற மாணவர்களுக்கிடையே ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.
ரத்த மாதிரி வகைகளை கண்டறிதல் விழாவில் கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். மாணவர்கள் கல்லூரி பருவத்தில் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய தலைமை உரையில் பேசினார்.
விழாவில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் வசந்தகுமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் கிளையின் தலைவர் செந்தில்குமார், ரத்த வங்கியில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் திருமால், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஜெகன், ராமமூர்த்தி, ஸ்டீபன் ஆகியோர் செய்திருந்தனர் . மேலும் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அலுவலர் பிரகாஷ், இளைஞர் செஞ்சுருள் சங்க அலுவலர் சரண்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
- விழிப்புணர்வு பேரணி அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.
- ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
நவீன இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் ராஜா ராம்மோகன்ராயின் 250-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணியை, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலமானது மீண்டும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பள்ளி மாணவிகள், ஆசிரியையர், நூலகர்கள் மற்றும் ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் மோசின்தாஜ் நிசார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.
- அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஓசூர் ராயக்கோட்டை ரோடு சர்க்கிளில் உள்ள எம்ஜி.ஆர். சிலைக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி மாலையணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, ஓசூர் மாநகர தெற்கு பகுதியில், பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி வைத்தும் கேக் வெட்டி, இனிப்பு, அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதேபோல், மாநகர வடக்கு , மேற்கு, கிழக்கு பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றி வைத்தும், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், பகுதி செயலாளர்கள், அசோகா, ராஜி, மஞ்சுநாத் மாநகர எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், ஓசூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், மண்டலத் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- சி.பி.எம்.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பிரச்சினை களை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஓசூர்
ஓசூர் ஒன்றிய சி.பி.எம்.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, ஓசூர் ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லி பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு ரையாற்றினார். மேலும், மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் உள்பட பலர் பேசினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நிலவி வரும் பிரச்சினை களை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டனர்.
- மேயர் எஸ். ஏ. சத்யா நேரில் சந்தித்து மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட, டாக்டர்க ளுக்கு அறிவுறுத்தினார்.
ஓசூர்,
ஓசூர், காமராஜ் காலனி யில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை விஷவாயு பரவி 67 மாணவ,மாணவியருக்கு வாந்தி,மயக்கம் ஏற்ப்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டனர்.
பெரும்பாலான மாண வர்கள் நலமுடன் வீடு திரும்பிய நிலையில், 7 மாணவர்கள் மட்டும் ஒசூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை, நேற்று ஓசூர் மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட, டாக்டர்க ளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பள்ளியில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறிந்திட அதிகாரி களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அவ்வழியாக வந்த வாகனம் மோதி உயிரிழந்தார்.
- பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48).எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் தனது மோட்டார்சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-ஓசூர் சாலையில் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த வாகனம் மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல ஓசூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்துவந்த ஜி .மங்களத்தை சேர்ந்த சதீஷ் (27) என்பவர் பாகலூர் - ஓசூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வரிசையிலாசூர் சிப்காட் அருகேயுள்ள குடியனூரை சேர்ந்த முனுசாமி (52) என்பவர் மூக்கண்டப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த கண்டைனர் லாரி மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






