என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக அளவிலான போட்டிகளில் வெற்றி:  அரசு பள்ளி மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு
    X

    சரக அளவிலான போட்டிகளில் வெற்றி: அரசு பள்ளி மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு

    • போட்டிகள் ஓசூர் அதியமான் கல்லூரியில் நடைபெற்றது.
    • மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    சூளகிரி,

    சூளகிரி ஒன்றியம் உங்கட்டி அரசு உயர் நிலைப் பள்ளி ஓசூர் வடக்கு சரக அளவிலான விளையாட்டுப் போட்டி களை தலைமையேற்று நடத்துகிறது.

    போட்டிகள் ஓசூர் அதியமான் கல்லூரியில் நடைபெற்றது. தடகளப் போட்டியில் உங்கட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் சிறப்பான முறையில் வென்று மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    அந்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமாரையும் ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் முனிராஜ், கோவிந்தராஜ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×