என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியை கிருஷ்ணகிரி நகர மன்றத் தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார்.
குந்தாரப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி
- ஒரு பிரிவிற்கு 8 போட்டிகள் என மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்பட்டது. .
- 500-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியினை நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் நேற்று குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
போட்டியின் துவக்கி நிகழ்ச்சிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி தலைமை வகித்தார். போட்டியை கிருஷ்ணகிரி நகர மன்றத் தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்து, விளையாட்டின் அவசியம் குறித்தும், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் மாணவியருக்கு எடுத்துரைத்தார்.
இதில், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில், ஒரு பிரிவிற்கு 8 போட்டிகள் என மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.
15-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்ட னர். இதில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.