என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த மாதிரி வகை கண்டறிதல் முகாம்"

    • மாணவர்களுக்கிடையே ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.
    • கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டமும் காவேரிப்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் கிளை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கிடையே ரத்த வகை மாதிரி நிகழ்ச்சி மற்ற மாணவர்களுக்கிடையே ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    ரத்த மாதிரி வகைகளை கண்டறிதல் விழாவில் கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். மாணவர்கள் கல்லூரி பருவத்தில் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய தலைமை உரையில் பேசினார்.

    விழாவில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் வசந்தகுமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் கிளையின் தலைவர் செந்தில்குமார், ரத்த வங்கியில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் திருமால், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஜெகன், ராமமூர்த்தி, ஸ்டீபன் ஆகியோர் செய்திருந்தனர் . மேலும் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அலுவலர் பிரகாஷ், இளைஞர் செஞ்சுருள் சங்க அலுவலர் சரண்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×