என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓசூரில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி -சப்- கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  X

  ஓசூரில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி -சப்- கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழிப்புணர்வு பேரணி அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.
  • ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  ஓசூர்,

  நவீன இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் ராஜா ராம்மோகன்ராயின் 250-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணியை, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலமானது மீண்டும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பள்ளி மாணவிகள், ஆசிரியையர், நூலகர்கள் மற்றும் ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் மோசின்தாஜ் நிசார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×