என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் 21-ந் தேதி முதுநிலை பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
- வருகிற 21ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
- இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் கலந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் முதல்வர் அனுராதா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்) எம்.எஸ்சி., (கணிதம், இயற்பியல்,வேதியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த வர்களுக்கும், துணை தேர்வில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்த வர்களுக்கும் வருகிற 21ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வின்போது மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், நான்கு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் உள்ளிட்டவையோடு, கலை பிரிவுக்கு ரூ.1,750, அறிவியல் பிரிவுக்கு ரூ1,810, கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ.2010 என சேர்க்கை கட்டணத் தொகையும் எடுத்து வர வேண்டும். இவ்வாறு தனது செய்திக்கு றிப்பில் கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்து ள்ளார்.






