என் மலர்
கிருஷ்ணகிரி
- ஆத்திரமடைந்த முல்லைவேந்தன், லோகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
- போலீசார் விஜயன், கோபி, பட்டுரோஜா, முல்லைவேந்தன், லோகநாதன் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து முல்லைவேந்தனை மட்டும் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள கொம்மப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முல்லைவேந்தன் (வயது27). அதே பகுதியை சேர்ந்த லோகநாதன். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
நேற்று லோகநாதன் வேலைக்கு சென்ற கூலியை முல்லைவேந்தனிடம் வாங்க சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முல்லைவேந்தன், லோகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இது குறித்து இரு தரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிங்கார பேட்டை போலீசார் விஜயன், கோபி, பட்டுரோஜா, முல்லைவேந்தன், லோகநாதன் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து முல்லைவேந்தனை மட்டும் கைது செய்தனர்.
- இந்த சாலை வழியாக செல்லவதற்கு அச்சபட்டு சென்று வருகின்றனர்.
- குற்றவியல் விசாரணையில் கணிணிமயமாக்கல்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி சுற்று வட்டாரங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் உத்தனப்பள்ளி சூளகிரி செல்லும் சாலை ஒரமாக உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் சாலையில் உள்ள தரை பாலத்தில் 2 1/2 அடி உயத்திற்கு தண்ணீர் செல்கிறது. இது முக்கியமான சாலை என்பதால் பல கிராம மக்கள் இந்த சாலை வழியாக செல்லவதற்கு அச்சபட்டு சென்று வருகின்றனர்.
அரசு சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கபட்டு ள்ளது. வேலைக்கும் செல்பவர்கள் மாணவர்கள் சிரம பட்டு வருகின்றனர். மழை காலங்களில் சிரமம் இல்லாமல் சென்று வர உயர் மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- காம்போ ஆபர்கள், குறைந்த விலையிலும், பிராண்ட் மற்றும் பேன்சி புடவைகள், குட்டி சுட்டீஸ்களுக்கு விதவிதமான டிசைன்களில் ஆடைகள் உள்ளது.
- எங்கும் கிடைக்காத விலையில் இந்த நிறுவனத்தில் தரமான மிகக்குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ்ல்-தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி.ரமேஷ் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 82 வருட நம்பிக்கை, நாணயம், கைராசி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசின், வெங்கடேஸ்வரா சில்க்ஸ் நம்பர்-1ஆக இருந்து வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20, 21, 22, 23 ஆகிய 4 நாட்களுக்கு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
இதில் அதிரடியான காம்போ ஆபர்கள், குறைந்த விலையிலும், பிராண்ட் மற்றும் பேன்சி புடவைகள், குட்டி சுட்டீஸ்களுக்கு விதவிதமான டிசைன்களில் ஆடைகள் உள்ளது.
ரூ.3 ஆயிரத்திற்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ் இலவசமாக வழங்குகிறோம். மேலும் ரூ.1000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான டிசைன்களில் ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி வரையில் இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
எங்கும் கிடைக்காத விலையில் இந்த நிறுவனத்தில் தரமான மிகக்குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும். தீபாவளியையொட்டி விதவிதமான ஆடைகள், புதுப்புது டிசைன்களில் சுடிதார், புடவைகள், ஆண்களுக்கான ஆடைகள் உள்பட இந்தியாவின் அனைத்து முன்னணி பிராண்ட் நிறுவனங்களின் ஜவுளிகளும் எங்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் உள்ளது.
எங்களிடம் பட்டு புடவைகளுக்கு 40 சதவீத தள்ளுபடியும், அனைத்து முன்னணி பிராண்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும், உள்ளது. விற்பனைக்காக ஏராளமான ஆடைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது,
வாடிக்கையாளர்கள் எப்போதும் போல தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- ஓசூர் 6-வது வார்டுக்குட்பட்ட கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளநீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.
- சமத்துவபுரம் பகுதியில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் இரவு மக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்றிரவு கனமழை பெய்தது. 72 மி.மீ மழை பதிவான நிலையில், நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
குறிப்பாக ஓசூர் 6-வது வார்டுக்குட்பட்ட கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளநீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தும், அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை மூழ்கடித்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இதனால் இன்று காலையில், தொழிற்சாலைகளுக்கும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பள்ளி குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு துறை வீரர்கள் ஒத்துழைப்புடன் ஜே.சி.பி எந்திரம் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் அருகிலுள்ள சமத்துவபுரம் பகுதியிலும் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் இரவு மக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.
- பணியாளர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தடுக்கும் முறைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, அக்.
கிருஷ்ணகிரி ஐவிடிபி தொழிற்பயிற்சி மையத்தில், உலக தரத்திலான புற்றுநோய் தொடர்பான மருத்துவ சேவைகளையும், விழிப்புணர்வையும் வழங்கி வரும் கார்கினோஸ் நிறுவனம் மூலம் ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு பணியாளர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் அந்நிறுவனத்தை சார்ந்த மருதுதுவ மாலினி சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் ராகேஷ்மேனன், ஈஸ்வர்சாஸ்திரி, சக்கரவர்த்தி மற்றும் பவன் ஆகியோர் புற்றுநோயை துவக்க நிலையில் கண்டறிதல் குறித்தும், புற்றுநோய் உள்ளவர்களுக்கு செய்யும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், பெண்கள் அதிகம் பாதிப்படையும் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களின் வகைகள் குறித்தும், அவற்றை வரவிடாமல் தடுக்கும் முறைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி தர்மபுரி மண்டல மேலாளர் பத்மாவதி துவக்கி வைத்தார்.
இதில் ஐவிடிபி நிறுவன பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு, பல்வேறு சந்தேகங்களையும், மருத்துவர்களின் ஆலோசனையும் கேட்டு பயனடைந்தனர். இறுதியில் ஐவிடிபி நிறவனத்தின் 500 பணியாளர்களுக்கு முதற்கட்டமாக குறைந்த விலையில் புற்றுநோய் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோ கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த தாஜூதீன் (வயது 27), ஜாவீத் (25), ஆரூண் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் உள்ள சுங்க சாவடி அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோ கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
ரூ.96 ஆயிரம் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்திவந்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த தாஜூதீன் (வயது 27), ஜாவீத் (25), ஆரூண் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த புகையிலை பொருட்களை பெங்களூருவிலிருந்து வேலூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
- தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பெய்த கன மழையால், முக்கிய வீதிகளில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 2 மணி முதல் 3.15 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானம், பஸ் நிலையம், ஐ.இ.எல்.சி. குன்றியோருக்கான பள்ளி, திருப்பத்தூர் சாலை, வாணியம்பாடி சாலை, பூ மாலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் மழை நீர் தேங்கியது.
நேற்று பர்கூர் பஸ் நிலையம் அருகே வாரச்சந்த்தைக்காக சாலை யோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் கடையில் உள்ள பொருட்களும் மழையில் நனைந்து வீணாகின. இதே போல், 70 மாணவர்கள் படிக்கும் ஐஇஎல்சி மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி வளாகத்தில் இரண்டு அடிக்கு மழை நீர் தேங்கியது.
நேற்று மாலை 5 மணிவரை நீர் வடியவில்லை. நகரின் முக்கிய வீதிகளில் தேங்கிய நீரால் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே இப்பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்து, மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறுவன் ஒருவன் ஒரு மறைவுக்கு பின்னால் அமர்ந்து மது பாட்டில்களை விற்கும் வீடியோ காட்சி நேற்று பரவியது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை,போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்தூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஒரு மறைவுக்கு பின்னால் அமர்ந்து மது பாட்டில்களை விற்கும் வீடியோ காட்சி நேற்று பரவியது.
இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர்.அப்போது அந்த சிறுவனின் வீடு பூட்டியிருந்தது. அக்கிராமத்தில் விசாரித்த போது மது விற்ற சிறுவன் 7-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.
மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த சிறுவனின் தந்தை இறந்து விட்டார். எனவே தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறான்.இதையடுத்து அந்த சிறுவனின் தாய் மது விற்று வந்துள்ளார்.
சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. தாய் கைதான நிலையில் அந்த சிறுவன் மது விற்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த வீடியோ வெளியானதால் சிறுவனின் குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள தங்களது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் ஊருக்கு திரும்பியதும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
11 வயது சிறுவன் மது விற்ற வீடியோ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பின்னர் செல்போன் பேச்சுகள் மூலம் அது காதலாக மாறியது.
- சிறுவனை சேலம் சீர்திருத்த பள்ளியிலும் சீனிவாசனை சிறையிலும் அடைத்தனர்.
மத்தூர்,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள குப்பான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சீனிவாசன் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரது 16 வயது மகன் இருவரும் நண்பர்கள்.
இவர்கள் 2 பேரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோவில் திருவிழா ஒன்றிற்கு சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிகள் இருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் செல்போன் பேச்சுகள் மூலம் அது காதலாக மாறியது.
இந்நிலையில் அந்த மாணவிகள் இருவரையும் சீனிவாசனும்,சிறுவனும் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து மாணவிகளின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகார் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பப்பட்டது.
அவர்கள் விசாரணை நடத்தி மாணவிகளையும் சீனிவாசன் மற்றும் சிறுவனையும் கண்டு பிடித்தனர்.மாணவிகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் சிறுவனை சேலம் சீர்திருத்த பள்ளியிலும் சீனிவாசனை சிறையிலும் அடைத்தனர்.
- தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
- ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட மேற்கண்ட இன மக்கள் (ஆண், பெண்) 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிக பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்த (ஆண், பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்து பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டரின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர், மிகப்பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிற்பான்மையினர் நல இயக்கம், சென்னைக்கு பரிந்துரை செய்யப்படும்.
இதில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சைக்கிளில் தேசபக்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
- சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றனர்.
ஓசூர்,
உலக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் காந்திஜி சேவா சங்கத்தின் மூலம் மதுரையை சேர்ந்த கருப்பையா என்பவர்,கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடங்கி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டா வரை சைக்கிளில் தேசபக்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
வழியில், ஓசூர் வந்த அவருக்கு, ஓசூர் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை,மாருதி நகரில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலய கமிட்டி தலைவரும் தி.மு.க. பிரமுகருமான ரங்கண்ணா பாபு தலைமையில் ஆலயகமிட்டி செயலாளர் ராஜி, மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவரும் ஆலய கமிட்டி உறுப்பினருமான முருகன் , தே.மு.தி.க மாநில செயற்குழு உறுப்பினரும் அலய கமிட்டி உறுப்பினருமான மணி ஆலய கமிட்டி உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கருப்பையாவிற்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றனர்.
மேலும் அவரது தேசபக்தி பாதயாத்திரை வெற்றியடைய வாழ்த்தினர். நேற்று, ஓசூர் எம்.ஜி. ரோடில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், கருப்பையா மீண்டும் அங்கிருந்து பாத யாத்திரையை தொடர்ந்தார். பொதுமக்கள் அவரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
கடந்த 15-ந்தேதி பெங்களூருவில் யாத்திரையை தொடங்கிய கருப்பையா, கர்நாடகம், தமிழகம் மற்றும் புதுச்சேரி வழியாக , 35 நாட்களில் 900 கி.மீ தூரத்தை கடந்து அடுத்த (நவம்பர்) மாதம் 18-ந் தேதி, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டாவில், தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
- பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாநிலத்திலிருந்தே பணி அமர்த்தப்படுகின்றனர்.
- 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த மூன்று ஆண்டுகளாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கூத்தனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாநிலத்திலிருந்தே பணி அமர்த்தப்படுகின்றனர். மேலும் 18 முதல் 21 வயது வரை என்கிற வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட பகுதி மக்களுக்கும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது போன்ற நிறுவனத்திற்காக விளை நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து துன்பப்படும் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல், வட மாநிலத்திலிருந்து இளம் பெண்களை அழைத்து வந்து புறா கூண்டில் அடைப்பது போல் அடிமைப்படுத்தியும், அவர்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு 5 சதவீத வேலை வாய்ப்புகூட வழங்கவில்லை. இதனை இரட்டை துரோகமாகவே மக்கள் கருதுகின்றனர்.
மேலும் மாசு நிறைந்த காற்றை சுவாசித்தும், ரசாயனம் கலந்த நீரை குடித்தும் பாதிப்புக்குள்ளாகு கின்றனர். கடந்த 1974ல் நடந்த திமுக ஆட்சியில் 80 சதவீத வேலை வாய்ப்பு தமிழக மக்களுக்கே என அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது குறைந்தது 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






