என் மலர்
கிருஷ்ணகிரி
- மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என பட்டாசுகள் வெடித்து விளக்கினர்.
மத்தூர்,
ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தீய ணைப்புத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு எரிவாயு கிடங்கு சமையலறை, பேருந்து நிலையம், முதியோர் வசிப்பிடம், குழந்தைகள் இருக்குமிடம்,
வீட்டுவிலங்குகள் இருக்குமிடம், வைக்கோல் கூரை வீடுகள்,குடிசைகள் மற்றும் மக்கள் கூடுமிடம் போன்ற இடங்களில் பட்டாசுகள் வெடிக்கவேண்டாம் என அறிவுறை வழங்கியதோடு பட்டாசுகள் வெடிப்பதற்கு
முன்பு நீரை அருகில் வைத்துக்கொண்டு பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என பட்டாசுகள் வெடித்து விளக்கினர்.
இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- தென்பெண்ணை ஆற்றின் ஓரம் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தார்.
- உடல் சிங்காரபேட்டை அருகேயுள்ள நடுப்பட்டி காமராஜ்நகர் பகுதியில் கரைஒதுங்கியது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் ராமமூர்த்தி (வயது31).
இவர் நேற்று அரூர் அருகேயுள்ள சந்திராபுரம் தென்பெண்ணை ஆற்றின் ஓரம் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தார்.
அப்போது ஆற்றின் வெள்ளம் எதிர்பாரா தவிதமாக ராமமூர்த்தியை அடித்து செல்லப்பட்டது. இதில் அவரது உடல் சிங்காரபேட்டை அருகேயுள்ள நடுப்பட்டி காமராஜ்நகர் பகுதியில் கரைஒதுங்கியது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிங்காரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இறந்து கிடந்த ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
- கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்சில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேலுமலை பகுதியில் விபத்தினை தடுக்கும் பொருட்டு சிவப்பு ஒளிரும் விளக்குகள், உயர் மின் கோபுர விளக்கு, வாகனங்கள் மெதுவாக செல்ல ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தல் மற்றும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகே வாகனங்கள் அபாயகரமாக பிரதான சாலையை கடப்பதால் விபத்துகளை தடுக்கும் பொருட்டு தடுப்பு சுவரிலுள்ள இடைவெளியினை முழுவதுமாக அடைக்க வேண்டும். சேலம் மேம்பாலம் அருகே பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் எதிர் திசையில் செல்லுவதால் அங்கு ஒரு போக்குவரத்து காவலர் மற்றும் சி.சி.டி.வி. கேமரா அமைக்கவும், விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
கே.ஆர்.பி அணை சந்திப்பு சாலை அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில் வாகனங்களை முற்றிலும் நிறுத்துவதை தவிர்ப்பது குறித்தும், சென்னை தேசிய நெடுஞ்சாலை குப்பம் பிரிவு சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வெள்ளை ஒளிரும் பட்டைகள் மற்றும் கேமரா பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது.
நகரின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரதான சாலை சந்திப்பு பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி, சாலை போக்குவரத்தினை கண்காணிப்பது. விதி மீறல்கள் இல்லாமல் சிறு சிறு விபத்துகளை தவிர்ப்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அளவிலான இரண்டு நாள் தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கியது.
- நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான இரண்டு நாள் தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, மாவட்ட தடகள சங்கத் தலைவரும், பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 14, 17 மற்றும் 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில், குடியரசு மற்றும் பாரதியார் தினப் போட்டிகளாக, 100, 200, 400, 500, 800 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் மற்றம் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.
இந்த போட்டிக்கு 9 சரகங்களில் இருந்து 1800 மாணவ, மாணவிகளும், 200-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் செய்துள்ளனர். இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.
- கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
- மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்குகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்அ-மைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்குகிறார். இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
எனவே, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்ட கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கனமழை பெய்ததில் 104 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ்நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை பகுதியில் கனமழை பெய்ததில் 104 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தளியில் 50 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழைக்கு ஏரிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை பெரிய ஏரி, அர்தக்கூர் ஏரியில் இருந்து வரும் உபரிநீர் தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே பட்டாளம்மன் ஏரிக்கு செல்கிறது.
வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள ராஜ கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கடைகள், வீடுகள், வனிக வளாகங்கள் கட்டி உள்ளனர். அதனால் மழைநீர் வெள்ளம் செல்ல வழியில்லாமல் நேற்று இரவு பெய்த கனமழைக்கு வனத்துறை சோதனைச்சாவடி அருகே வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
கிருஷ்ணமூர்த்தி, சந்திமோகன், ராஜேஷ், ராஜா, குண்டம்மா, சூரி, ராமசந்திரன், நஞ்சப்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீரால் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள், உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் சோதனை சாவடி அருகே உள்ள சுரேஷ் என்பவரின் பேக்கரி கடை முன்பு அமைத்திருந்த ெஜனரேட்டர் மற்றும் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, 'பெரிய ஏரியில் இருந்து இருந்து வரும் வெள்ளநீர், அர்த்தகூர் ஏரியில் இருந்து வரும் வெள்ள நீர் வரும் ராஜ கால்வாயை சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், கட்டி உள்ளனர். அதனால் கால்வாய் குறுகி வெள்ளம் வீடுகளுக்குள் புதுந்துள்ளதால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்தன. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்கள்.
- மழைநீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர்.
- குடியுருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.சி. நகரில் பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நேற்று மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தெருக்களில் புகுந்த தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களும் சேதமானது.
மழைநீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பாக ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர்.
உடைந்த ராஜகால்வாய்க்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல வெள்ளம் குறைந்து வருகிறது. கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கே.சி.சி. நகரில் தண்ணீர் வடிந்தது.
குடியுருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
வெள்ளத்தில் மூழ்கிய கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது. வெள்ளம் வடிந்ததால் கே.சி.சி. நகர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ள காட்சி. * * * ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு கார் தலைகுப்புற கிடக்கும் காட்சி.
- 200 மாடுகள், 350 ஆடுகள், 200 கோழிகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- 100 மாடுகளுக்கு தாது உப்பு வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கீழ்பூங்குருத்தி
கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமினை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி, தொடங்கி வைத்து, சிறப்பாக வளர்க்கப்பட்ட கால்நடை உரிமையாளர்
13பயனாளிகளுக்கு கேடயம் ம்றறும் பரிசுகளை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஒரு முகாமிற்கு ரூ.10 ஆயிரம் வீதம், ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 200 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் 200 மாடுகள், 350 ஆடுகள், 200 கோழிகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 100 மாடுகளுக்கு தாது உப்பு வழங்கப்படுகிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இம்முகாம்கள் மூலம் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.ராஜேந்திரன், ஆவின் பொது மேலாளர் டாக்டர்.வசந்த்குமார், துணை பொதுமேலாளர் டாக்டர்.நாகராஜ், ஆவின் துணைப்பதிவாளர் கோபி, உதவி இயக்குநர்கள் டாக்டர்.மரியசுந்தர், டாக்டர்.அருள்ராஜ், தாசில்தார் பன்னீர்செல்வி, கால்நடை உதவி மருத்துவர்கள் திருமுருகன், வேலன், ரோஜா, பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கட்ராமகணேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேட்டு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகேசன், கால்நடை ஆய்வாளர் சிவநேசன், சின்னசாமி, யூனஸ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நாகேஷ், முனிராஜ் மற்றும் கால்நடை விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- 65, 70, 75 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் முறையே 5, 10, 15 சதவீதம் உயர்த்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.1000 போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட ஓய்வு பெற்ற நீதித்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின் 11ம் ஆண்டு விழா மற்றும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் வைத்தியநாதன், இணை செயலாளர் கோபிநாதராவ், துணைத் தலைவர் காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சையத் ஷபீர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோபால் ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவு செலவு கணக்கை சமர்பித்தார். ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாதன், செயலாளர் துரை.ஜெகன்நாதன், ஓய்வுபெற்ற தாசில்தார் ஜனார்தனராவ், குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் தங்கவேலு, மாவட்டத் தலைவர் செல்வகுமார், வியாபாரிகள் சங்க நகர தலைவர் சுரேஷ், சத்தியவாணி, பேபிசரஸ்வதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இக்கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.1000 போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும். ஓசூர், தேன்கனிக்கோட்டையில் குடியிருக்கும் ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மலைவாழ்படி, குளிர் கால படி அரசுப் பணியாளர்களுக்கு கொடுப்பது போல் வழங்கிட வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்கு முன்பு ஓய்வுபெற்ற போது வகித்த பதவியின் ஊதிய விகிதம் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் தொகையுடன் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியில் உள்ளதர ஊதியம் சேர்த்து வரும் தொகையில், 50 சதவீதம் வரை அதிகரித்து, மத்திய அரசு ஆணை வழங்கியிருக்கின்றது.
அதே போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். 65, 70, 75 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் முறையே 5, 10, 15 சதவீதம் உயர்த்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இரட்டையர் பிரிவில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
- இரட்டையர் பிரிவில் சாருஹாசினி, மேனாவதி ஆகியோர் 2ம் இடமும் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில் டென்னிஸ் போட்டியில் 14வயதிற்குட்பட்ட ஒற்றை யர் மற்றும்அதில், ஜாகீர்வெங்கடா புரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சரக அளவில் ஒற்றையர் பிரிவில் சாருஹாசினி முதலிடமும், இரட்டையர் பிரிவில் சாருஹாசினி, மேனாவதி ஆகியோர் 2ம் இடமும் பிடித்தனர்.
மாவட்ட அளவில் நடந்த ஒற்றையர் பிரிவில் சாருஹாசினி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், மாநில அளவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
டென்னிஸ் போட்டியில் சாதனை படைத்துள்ள மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. வெற்றி பெற்றுள்ள மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையசிரியர் (பொ) விஜய் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள பெரமகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது27). இவரும் போச்சம்பள்ளிைய சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மத்தூர் அருகே கமலாபுரம் மாரியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மினிலாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள சின்னசந்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது65). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் கல்லாவிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சின்னசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






