என் மலர்
நீங்கள் தேடியது "சுகாதார விழிப்புணர்வு முகாம்"
- அத்தி முட்லு கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற தலைவர் மாதராஜ் மற்றும் துணைத் தலைவர் ராணி முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
மாரண்டஅள்ளி.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்தி முட்லு கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாதராஜ் மற்றும் துணைத் தலைவர் ராணி முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
இம்முகாமில் மருத்துவர்கள் முத்து, கார்த்திகேயன், தியாகசீலன் மற்றும் கேப்ரியர் மேரி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தால், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், அனைத்து கால்நடைகளுக்கும் நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடுதல், சிறு அறுவை சிகிச்சை மற்றும் திணை வகைகள் சாகுபடி விவரம் போன்ற சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் முகாமில் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் அத்திமூட்டு கிராமத்தை சுற்றி உள்ள சுமார் 600 கால்நடைகளுக்கு மேல் பயனடைந்தன. மேலும் கன்றுகளுக்கான பேரணி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கன்றுகளில் சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான கால்நடை உரிமை யாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ் குமார் தலைமை வகித்தார்.
தொப்பூர்,
நல்லம்பள்ளி அடுத்துள்ள லளிகம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ் குமார் தலைமை வகித்தார். மற்றும் ஒன்றிய கவுன்சிலர் புனிதம் பழனிசாமி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மணிமாறன், கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் மருத்துவர் கண்ணதாசன், கால்நடை உதவி மருத்துவர் பொற்செழியன் பால் கூட்டுறவு சங்க தலைவர் நீலவண்ணன், செயலாளர் சீனிவாசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த கால்நடை வளர்த்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் கன்றுகளை பராமரித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் 400 மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி 350 ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- செயற்கை முறை கருவூட்டல், கன்றுகள் மற்றும் ஆடு குடற்புழு நீக்கம் பற்றி விளக்கி கூறப்பட்டது.
- கால்நடைகளை பற்றிய விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் ஒன்றியம் பச்சாபாளையம் ஊராட்சியில் திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பிரகாசம் முன்னிலையில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் தடுப்பூசிகளின் நன்மை பற்றியும் பெரியம்மை குறித்தும், செயற்கை முறை கருவூட்டல், கன்றுகள் மற்றும் ஆடு குடற்புழு நீக்கம் பற்றி விளக்கி கூறப்பட்டது.
சிறந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் அனைத்து கால்நடைகளை பற்றிய விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முகாமில் கால்நடை உதவி மருத்துவர் எஸ்.பிரபு மற்றும் பச்சாபாளையம் ஊராட்சி விவசாயிகள், கால்நடை மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர்.
- 200 மாடுகள், 350 ஆடுகள், 200 கோழிகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- 100 மாடுகளுக்கு தாது உப்பு வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கீழ்பூங்குருத்தி
கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமினை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி, தொடங்கி வைத்து, சிறப்பாக வளர்க்கப்பட்ட கால்நடை உரிமையாளர்
13பயனாளிகளுக்கு கேடயம் ம்றறும் பரிசுகளை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஒரு முகாமிற்கு ரூ.10 ஆயிரம் வீதம், ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 200 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் 200 மாடுகள், 350 ஆடுகள், 200 கோழிகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 100 மாடுகளுக்கு தாது உப்பு வழங்கப்படுகிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இம்முகாம்கள் மூலம் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.ராஜேந்திரன், ஆவின் பொது மேலாளர் டாக்டர்.வசந்த்குமார், துணை பொதுமேலாளர் டாக்டர்.நாகராஜ், ஆவின் துணைப்பதிவாளர் கோபி, உதவி இயக்குநர்கள் டாக்டர்.மரியசுந்தர், டாக்டர்.அருள்ராஜ், தாசில்தார் பன்னீர்செல்வி, கால்நடை உதவி மருத்துவர்கள் திருமுருகன், வேலன், ரோஜா, பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கட்ராமகணேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேட்டு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகேசன், கால்நடை ஆய்வாளர் சிவநேசன், சின்னசாமி, யூனஸ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நாகேஷ், முனிராஜ் மற்றும் கால்நடை விவசாயிகள் கலந்துகொண்டனர்.






