என் மலர்
உள்ளூர் செய்திகள்

லளிகம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
- கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ் குமார் தலைமை வகித்தார்.
தொப்பூர்,
நல்லம்பள்ளி அடுத்துள்ள லளிகம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ் குமார் தலைமை வகித்தார். மற்றும் ஒன்றிய கவுன்சிலர் புனிதம் பழனிசாமி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மணிமாறன், கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் மருத்துவர் கண்ணதாசன், கால்நடை உதவி மருத்துவர் பொற்செழியன் பால் கூட்டுறவு சங்க தலைவர் நீலவண்ணன், செயலாளர் சீனிவாசன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த கால்நடை வளர்த்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் கன்றுகளை பராமரித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் 400 மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி 350 ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.






