பச்சாபாளையம் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

செயற்கை முறை கருவூட்டல், கன்றுகள் மற்றும் ஆடு குடற்புழு நீக்கம் பற்றி விளக்கி கூறப்பட்டது.கால்நடைகளை பற்றிய விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பச்சாபாளையம் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
Published on

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் ஒன்றியம் பச்சாபாளையம் ஊராட்சியில் திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பிரகாசம் முன்னிலையில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் தடுப்பூசிகளின் நன்மை பற்றியும் பெரியம்மை குறித்தும், செயற்கை முறை கருவூட்டல், கன்றுகள் மற்றும் ஆடு குடற்புழு நீக்கம் பற்றி விளக்கி கூறப்பட்டது.

சிறந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் அனைத்து கால்நடைகளை பற்றிய விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

முகாமில் கால்நடை உதவி மருத்துவர் எஸ்.பிரபு மற்றும் பச்சாபாளையம் ஊராட்சி விவசாயிகள், கால்நடை மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com