என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை உரிமையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
அத்திமுட்லு கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
- அத்தி முட்லு கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற தலைவர் மாதராஜ் மற்றும் துணைத் தலைவர் ராணி முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
மாரண்டஅள்ளி.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்தி முட்லு கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாதராஜ் மற்றும் துணைத் தலைவர் ராணி முனுசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
இம்முகாமில் மருத்துவர்கள் முத்து, கார்த்திகேயன், தியாகசீலன் மற்றும் கேப்ரியர் மேரி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தால், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், அனைத்து கால்நடைகளுக்கும் நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடுதல், சிறு அறுவை சிகிச்சை மற்றும் திணை வகைகள் சாகுபடி விவரம் போன்ற சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் முகாமில் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் அத்திமூட்டு கிராமத்தை சுற்றி உள்ள சுமார் 600 கால்நடைகளுக்கு மேல் பயனடைந்தன. மேலும் கன்றுகளுக்கான பேரணி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கன்றுகளில் சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான கால்நடை உரிமை யாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.






