என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என பட்டாசுகள் வெடித்து விளக்கினர்.

    மத்தூர்,

    ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்வில் தீய ணைப்புத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு எரிவாயு கிடங்கு சமையலறை, பேருந்து நிலையம், முதியோர் வசிப்பிடம், குழந்தைகள் இருக்குமிடம்,

    வீட்டுவிலங்குகள் இருக்குமிடம், வைக்கோல் கூரை வீடுகள்,குடிசைகள் மற்றும் மக்கள் கூடுமிடம் போன்ற இடங்களில் பட்டாசுகள் வெடிக்கவேண்டாம் என அறிவுறை வழங்கியதோடு பட்டாசுகள் வெடிப்பதற்கு

    முன்பு நீரை அருகில் வைத்துக்கொண்டு பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என பட்டாசுகள் வெடித்து விளக்கினர்.

    இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×