என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கல்லாவி அருகே  மினிலாரி மோதி முதியவர் சாவு
    X

    கல்லாவி அருகே மினிலாரி மோதி முதியவர் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மினிலாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள சின்னசந்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது65). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் கல்லாவிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சின்னசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×