என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சிங்காரபேட்டை அருகே  ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு  -கரையோரம் மதுஅருந்திய போது நேர்ந்த பரிதாபம்
    X

    சிங்காரபேட்டை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு -கரையோரம் மதுஅருந்திய போது நேர்ந்த பரிதாபம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்பெண்ணை ஆற்றின் ஓரம் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தார்.
    • உடல் சிங்காரபேட்டை அருகேயுள்ள நடுப்பட்டி காமராஜ்நகர் பகுதியில் கரைஒதுங்கியது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் ராமமூர்த்தி (வயது31).

    இவர் நேற்று அரூர் அருகேயுள்ள சந்திராபுரம் தென்பெண்ணை ஆற்றின் ஓரம் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தார்.

    அப்போது ஆற்றின் வெள்ளம் எதிர்பாரா தவிதமாக ராமமூர்த்தியை அடித்து செல்லப்பட்டது. இதில் அவரது உடல் சிங்காரபேட்டை அருகேயுள்ள நடுப்பட்டி காமராஜ்நகர் பகுதியில் கரைஒதுங்கியது.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிங்காரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இறந்து கிடந்த ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×