என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக ஒற்றுமையை வலியுறுத்தி  சைக்கிளில் யாத்திரை மேற்கொண்டுள்ள மதுரையை சேர்ந்த தேச பக்தருக்கு வரவேற்பு
    X

    உலக ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிளில் யாத்திரை மேற்கொண்டுள்ள மதுரையை சேர்ந்த தேச பக்தருக்கு வரவேற்பு

    • சைக்கிளில் தேசபக்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
    • சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றனர்.

    ஓசூர்,

    உலக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் காந்திஜி சேவா சங்கத்தின் மூலம் மதுரையை சேர்ந்த கருப்பையா என்பவர்,கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடங்கி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டா வரை சைக்கிளில் தேசபக்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    வழியில், ஓசூர் வந்த அவருக்கு, ஓசூர் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை,மாருதி நகரில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆலய கமிட்டி தலைவரும் தி.மு.க. பிரமுகருமான ரங்கண்ணா பாபு தலைமையில் ஆலயகமிட்டி செயலாளர் ராஜி, மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவரும் ஆலய கமிட்டி உறுப்பினருமான முருகன் , தே.மு.தி.க மாநில செயற்குழு உறுப்பினரும் அலய கமிட்டி உறுப்பினருமான மணி ஆலய கமிட்டி உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கருப்பையாவிற்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றனர்.

    மேலும் அவரது தேசபக்தி பாதயாத்திரை வெற்றியடைய வாழ்த்தினர். நேற்று, ஓசூர் எம்.ஜி. ரோடில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், கருப்பையா மீண்டும் அங்கிருந்து பாத யாத்திரையை தொடர்ந்தார். பொதுமக்கள் அவரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

    கடந்த 15-ந்தேதி பெங்களூருவில் யாத்திரையை தொடங்கிய கருப்பையா, கர்நாடகம், தமிழகம் மற்றும் புதுச்சேரி வழியாக , 35 நாட்களில் 900 கி.மீ தூரத்தை கடந்து அடுத்த (நவம்பர்) மாதம் 18-ந் தேதி, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டாவில், தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

    Next Story
    ×