என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. பணியாளர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு
  X

  கிருஷ்ணகிரியில் ஐவிடிபி நிறுவன பணியாளர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கார்கினோஸ் நிறுவனத்தின் டாக்டர் மாலினி சந்திரசேகர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. பணியாளர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பணியாளர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • தடுக்கும் முறைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

  கிருஷ்ணகிரி, அக்.

  கிருஷ்ணகிரி ஐவிடிபி தொழிற்பயிற்சி மையத்தில், உலக தரத்திலான புற்றுநோய் தொடர்பான மருத்துவ சேவைகளையும், விழிப்புணர்வையும் வழங்கி வரும் கார்கினோஸ் நிறுவனம் மூலம் ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு பணியாளர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  இதில் அந்நிறுவனத்தை சார்ந்த மருதுதுவ மாலினி சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் ராகேஷ்மேனன், ஈஸ்வர்சாஸ்திரி, சக்கரவர்த்தி மற்றும் பவன் ஆகியோர் புற்றுநோயை துவக்க நிலையில் கண்டறிதல் குறித்தும், புற்றுநோய் உள்ளவர்களுக்கு செய்யும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

  மேலும், பெண்கள் அதிகம் பாதிப்படையும் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களின் வகைகள் குறித்தும், அவற்றை வரவிடாமல் தடுக்கும் முறைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

  ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி தர்மபுரி மண்டல மேலாளர் பத்மாவதி துவக்கி வைத்தார்.

  இதில் ஐவிடிபி நிறுவன பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு, பல்வேறு சந்தேகங்களையும், மருத்துவர்களின் ஆலோசனையும் கேட்டு பயனடைந்தனர். இறுதியில் ஐவிடிபி நிறவனத்தின் 500 பணியாளர்களுக்கு முதற்கட்டமாக குறைந்த விலையில் புற்றுநோய் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

  Next Story
  ×