என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவிகளை கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது"

    • பின்னர் செல்போன் பேச்சுகள் மூலம் அது காதலாக மாறியது.
    • சிறுவனை சேலம் சீர்திருத்த பள்ளியிலும் சீனிவாசனை சிறையிலும் அடைத்தனர்.

    மத்தூர்,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள குப்பான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சீனிவாசன் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரது 16 வயது மகன் இருவரும் நண்பர்கள்.

    இவர்கள் 2 பேரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோவில் திருவிழா ஒன்றிற்கு சென்றனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிகள் இருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் செல்போன் பேச்சுகள் மூலம் அது காதலாக மாறியது.

    இந்நிலையில் அந்த மாணவிகள் இருவரையும் சீனிவாசனும்,சிறுவனும் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து மாணவிகளின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் செய்தனர்.

    இந்த புகார் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பப்பட்டது.

    அவர்கள் விசாரணை நடத்தி மாணவிகளையும் சீனிவாசன் மற்றும் சிறுவனையும் கண்டு பிடித்தனர்.மாணவிகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் சிறுவனை சேலம் சீர்திருத்த பள்ளியிலும் சீனிவாசனை சிறையிலும் அடைத்தனர்.

    ×