என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளியை தாக்கி வாலிபர் கைது"

    • ஆத்திரமடைந்த முல்லைவேந்தன், லோகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
    • போலீசார் விஜயன், கோபி, பட்டுரோஜா, முல்லைவேந்தன், லோகநாதன் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து முல்லைவேந்தனை மட்டும் கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள கொம்மப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முல்லைவேந்தன் (வயது27). அதே பகுதியை சேர்ந்த லோகநாதன். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

    நேற்று லோகநாதன் வேலைக்கு சென்ற கூலியை முல்லைவேந்தனிடம் வாங்க சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த முல்லைவேந்தன், லோகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    இது குறித்து இரு தரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிங்கார பேட்டை போலீசார் விஜயன், கோபி, பட்டுரோஜா, முல்லைவேந்தன், லோகநாதன் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து முல்லைவேந்தனை மட்டும் கைது செய்தனர்.

    ×