என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணகிரி அருகே  வெவ்வேறு விபத்துகளில் எல்.ஐ.சி.முகவர் உள்பட 3 பேர் சாவு
  X

  கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு விபத்துகளில் எல்.ஐ.சி.முகவர் உள்பட 3 பேர் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவ்வழியாக வந்த வாகனம் மோதி உயிரிழந்தார்.
  • பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48).எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் தனது மோட்டார்சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-ஓசூர் சாலையில் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த வாகனம் மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  இதேபோல ஓசூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்துவந்த ஜி .மங்களத்தை சேர்ந்த சதீஷ் (27) என்பவர் பாகலூர் - ஓசூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  இந்த வரிசையிலாசூர் சிப்காட் அருகேயுள்ள குடியனூரை சேர்ந்த முனுசாமி (52) என்பவர் மூக்கண்டப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த கண்டைனர் லாரி மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×