என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பஸ் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
    • கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் வருவதற்காக காத்திருந்தனர். பின்னர் பஸ் நிலையத்திலேயே அவர்கள் தூங்கினர்.

    கண் விழித்து பார்த்தபோது அவர்களது 6 மாத குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பஸ் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து ஓசூர் போலீசில் அவர்கள் புகார் செய்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு பெண் வடமாநில தம்பதியின் குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து செல்ேபான் சிக்னல் மூலம் பெங்களூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற அந்த பெண்ணை மடக்கி கைது செய்தனர். அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர். காணாமல் போன குழந்தையை 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டது குறிப்பிடதக்கது.

    இதேபோல அந்த பெண் வேறு குழந்தைகளை கடத்தியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டரிடம் அனுமதி பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றமாகும்.
    • மின் இணைப்பை துண்டிக்க, மின் வாரியத்தின் மூலம் விதிகளின் படி மேல்நடவடிக்கை தொடரப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டகலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளில், சில தொழிற்சாலைகள் தற்போது வரை கனிம இருப்பு கிடங்கு அமைக்க, கலெக்டரிடம் அனுமதி பெற எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றமாகும்.

    எனவே, தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள், 2011-ன் விதி 4-ன்படி கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள், 15 நாட்களுக்குள் விண்ணப்பம் அளித்தவுடன், தங்கள் தொழிற்சாலைகளை பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

    தவறும்பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்தால் மேற்படி தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க, மின் வாரியத்தின் மூலம் விதிகளின் படி மேல்நடவடிக்கை தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பஞ்சாயத்தில் அவசர கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் அவசர கூட்டம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் அம்சவேணி செந் தில்குமார் தலைமை வகித்தார்.

    இதில் வார்டு உறுப்பினர்களை உள்ள டக்கிய வார்டு குழு, பகுதி சபா உருவாக்குவது,வார்டு குழு செயலாளர் நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. அதன்படி வார்டு உறுப்பினர்களை தலைவராக கொண்டு, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தின் ஒவ்வொரு வார்டையும், 3 பகுதிகளாக பிரித்து அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்னை, உள்ளிட்டவைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முள்ளங்கிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
    • பயிரிட்டிருந்த முள்ளங்கிகளை டிராக்டர் கொண்டு உழுது அழித்தார்.

    ஓசூர்

    ஓசூர் அருகே உள்ள ஆலூர் தின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி பயிர்களை பயிரிட்டிருந்தார். இதற்காக அவர் 30,000/- ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

    தற்போது சந்தைகளில் முள்ளங்கிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு கிலோ முள்ளங்கி சந்தையில் 18 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாய தோட்டங்களில் விவசாயிகளிடம் ஒரு கிலோ முள்ளங்கியை ரூ. 4,ரூ.5 என வியாபாரிகளால் விலை கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் பல விவசாயிகள் முள்ளங்கிகளை பறிக்காமல் அப்படியே தோட்டத்தில் விட்டு விட்டனர். முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால் வேதனையடைந்த விவசாயி ராமமூர்த்தி தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த முள்ளங்கிகளை டிராக்டர் கொண்டு உழுது அழித்தார். இதில் சுமார் 15 டன் முள்ளங்கிகள் சேதமானதாக வேதனையுடன் தெரி வித்தார். 

    • விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது.
    • அவசர, அவசரமாக விளை நிலங்களில் நெற்ப யிற்களை அழிப்பது நியாயம்தானா? எனவும் கேள்வி.

    ஓசூர்,

    பெங்களூர் விமான நிலையம் முதல் ஓசூரை சுற்றி எஸ்.டி.ஆர் ஆர். என்னும் சேட்டிலைட் ரிங்ரோடு, 21 கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமையவுள்ளது.சேட்டிலைட் ரிங்ரோடு அமைக்க திட்ட மதிப்பீடு முடிந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில்,ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தில் 6 வழிச்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் தற்போது விவசாயிகள் நெற்பயிரிட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தின் மூலம் சாலை பணிகளுக்காக, நெல்வயலில் பயிர்களை அழித்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயிகள் அறுவடைக்காக 1 மாத கால அவகாசம் கேட்டும், அதிகாரிகள் சிறிதும் செவி சாய்க்காமல் பயிர்களை அழித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சாலை பணிகளை தொடங்கவே, இன்னும் பல மாதங்களாகும் என கூறப்படும் நிலையில், அவசர, அவசரமாக விளை நிலங்களில் நெற்ப யிற்களை அழிப்பது நியாயம்தானா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள விவசாயிகள், அறுவடைக்கு பிறகு பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டிரைவர் ரமேஷ் சிங் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.
    • இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி பகுதியில் சென்னையில் இருந்து கண்ணாடி கிளாஸ் ஏற்றிக்கொண்டு கொச்சின் நோக்கி சென்ற லாரியும், உத்திர பிரதேசத்திலிருந்து பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    அதில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் சிங் (வயது 56 ) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. எதிரே வந்த ஆரணி பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெகதீஸ்வரன் (37), மற்றொரு டிரைவர் ராஜசேகர் (35) இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் ரமேஷ் சிங் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் மற்றும் சிங்காரப்பேட்டை போலீசார் போராடி ரமேஷ் சிங்கை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
    • உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை கடையை அரசு சார்பில் தொடங்கிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குநருமான வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    மாமரங்களில் பராமரிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மருந்துகள் விற்பனை செய்யும் பெரும்பாலான கடைகளில் விலைப்பட்டியல் பார்வைக்கு வைக்கப்படவில்லை. மேலும், போலி மருந்துகளை விற்பனை செய்கின்றனர். ஏற்கனவே, 2 ஆண்டுகளாக மா விவசாயிகள் இழப்பினை சந்தித்து வருகிறோம். எனவே, தோட்டக்கலை அல்லது வேளாண்மைத்துறை சார்பில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை கடையை அரசு சார்பில் தொடங்கிட வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் அம்மை மற்றும் வைரஸ் நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன. போதிய அளவில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து, கால்நடைகளுக்கு செலுத்தி, கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே தீவன விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பால் கொள்முதல் விலையை அரசு உடனடியாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். தொப்படிகுப்பத்தில் இருந்து சந்தூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உடனடியாக தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    அதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

    அரசு சார்பில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை தொடங்க வழிவகை இல்லை. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர்கள் குழு மூலம் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல் வயலில் சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளை விரட்டிட 400 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கி, தேனீக்கள் வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 10 சதவீத பேர் கூட தேனீக்கள் வளர்க்கவில்லை. மீண்டும் விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து தொடர் பயிற்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயம் அடைந்தார்.
    • மாதேஷ் உயிரிழந்தார். முரளிகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள எர்ரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32).இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி சென்றார்.அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயம் அடைந்தார்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல பாகனப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதேஷ் (22) என்பவர் தனது நண்பர் முரளிகிருஷ்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி சாலையில் சென்றார்.அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியது காயமடைந்த மாதேஷ் உயிரிழந்தார். முரளிகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த 2 விபத்துகள் குறித்தும் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
    • கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகங்கள் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை தர்மராஜா கோவில் சாலையில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதையொட்டி கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கொடி ஏற்றுதல், முதல் கால பூஜை, தீபாராதனை நடந்தது. அன்ற மாலை கணபதி பூஜை, இரண்டாம் காலயாக பூஜை ஆகியவை நடந்தது.

    27-ந் தேதி காலை கணபதி பூஜை, கலச பூஜை, விசேஷ மந்த்ர ஹோமங்கள்ஆகியவையும், மதியம் மூன்றாம் கால யாகம் நடந்தது.நேற்று நவகிரக ஹோமங்கள், 5-ம் கால பூஜைகள் நடந்தது- தொடர்ந்து கலச புறப்படுதல், முத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சாமிக்குஅபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வேப்பனப்பள்ளி நகரத்தின் அருகே வந்த போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே புகுந்துள்ளது.
    • திடீரென்று இருசக்கர வாகனத்தை கிருஷ்ணமூர்த்தி நிறுத்திய போது பின்னே வந்த முரளி மற்றும் மாதேஷ் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து மோதிக்கொண்டனர்.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கட்டாயம்பேடு கிராமத்தை சேர்ந்த மாதேஷ்(வயது 22), ஒட்டூர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நவீன் (25), கொரலட்டி கிராமத்தை சேர்ந்த முரளி(22) மற்றும் கட்டாயம்பேடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 நண்பர்களுடன் இரவு வேப்பனபள்ளி அருகே உள்ள அவரது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மூன்று இரு சக்கர வாகனங்களில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது சுமார் 9 மணி அளவில் வேப்பனப்பள்ளி நகரத்தின் அருகே வந்த போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே புகுந்துள்ளது. அப்போது திடீரென்று இருசக்கர வாகனத்தை கிருஷ்ணமூர்த்தி நிறுத்திய போது பின்னே வந்த முரளி மற்றும் மாதேஷ் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து மோதிக்கொண்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே மாதேஷ் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து காயமடைந்த முரளி மற்றும் நவீன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர்.

    பின்னர் அதே பகுதியில் வேப்பனப்பள்ளியில் இருந்து தாசிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் புதூர் கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்த தியாகராஜன் (32) என்பவரும் அதே பகுதியில் மற்றொரு மோட்டார்சைக்கிளில் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே தியாகராஜன் துடிதுடித்து பரிதாபமாக உயிழிழந்தார்.

    தொடர்ந்து ஒரே இடத்தில் 5 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திடீர் மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.
    • முதியவர் கிருஷ்ணப்பா தீயில் கருகி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    ஓசூர்

    ஓசூர் அருகேயுள்ள குமுதேப்பள்ளி விக்னேஷ் நகர் கங்காதீஸ்வரர் கோயில் அருகில் வசித்து வருபவர் அம்பிகா (37) .கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் இவருடன் அவரது தந்தை கிருஷ்ணப்பாவும் வசித்து வருகிறார்.

    நேற்று அம்பிகா திருமண நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். அவரது தந்தை கிருஷ்ணப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் அம்பிகாவின் வீட்டில்

    திடீர் மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது பயங்கர சத்தமும் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீயானது அதிக அளவில் பரவியதால், உடனடியாக அவர்கள் ஓசூர் தீயணைப்புத்துறை மற்றும் அட்கோ போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற ஒசூர் தீயணைப்புத்துறையினர் வீட்டின் கதவை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முதியவர் கிருஷ்ணப்பா தீயில் கருகி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓசூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக முத்தாலி ஏரி நிரம்பியது.
    • ஏரியில் தெப்பம் விட்டு, கிடா வெட்டி,பூஜை செய்தனர்

    ஓசூர்

    ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் உள்ள ஏரிக்கு கடந்த 18 வருடங்களாக தண்ணீர் வராமல் அந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக முத்தாலி ஏரி நிரம்பியது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த பெரிய முத்தாலி, சின்னமுத்தாலி,பெத்த குள்ளு, சின்ன குள்ளு உள்ளிட்ட 10 கிராம மக்கள் நேற்று மாலை ஏரியில் தெப்பம் விட்டு, கிடா வெட்டி,பூஜை செய்தனர்

    மேலும் விவசாயிகள் கூறும்போது, கடந்த 2004 -ஆம் ஆண்டு நிரம்பிய ஏரி, பின்னர் அடுத்தடுத்து மழை இன்றி ஏரியில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது.இந்த வருடம் கனமழையின் காரணமாக ஏரி நிரம்பியது. இதனால் நாங்கள் கங்கா பூஜை செய்து வழிபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×