என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே  2 டாரஸ் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து  -டிரைவர் கால் முறிவு-போக்குவரத்து பாதிப்பு
    X

    ஊத்தங்கரை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இடிபாடிகளில் சிக்கிய டிரைவரை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

    ஊத்தங்கரை அருகே 2 டாரஸ் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து -டிரைவர் கால் முறிவு-போக்குவரத்து பாதிப்பு

    • டிரைவர் ரமேஷ் சிங் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.
    • இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி பகுதியில் சென்னையில் இருந்து கண்ணாடி கிளாஸ் ஏற்றிக்கொண்டு கொச்சின் நோக்கி சென்ற லாரியும், உத்திர பிரதேசத்திலிருந்து பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    அதில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் சிங் (வயது 56 ) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. எதிரே வந்த ஆரணி பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெகதீஸ்வரன் (37), மற்றொரு டிரைவர் ராஜசேகர் (35) இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் ரமேஷ் சிங் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் மற்றும் சிங்காரப்பேட்டை போலீசார் போராடி ரமேஷ் சிங்கை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×