என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முள்ளங்கி பயிர்களை அழித்த விவசாயி"

    • முள்ளங்கிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
    • பயிரிட்டிருந்த முள்ளங்கிகளை டிராக்டர் கொண்டு உழுது அழித்தார்.

    ஓசூர்

    ஓசூர் அருகே உள்ள ஆலூர் தின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி பயிர்களை பயிரிட்டிருந்தார். இதற்காக அவர் 30,000/- ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

    தற்போது சந்தைகளில் முள்ளங்கிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு கிலோ முள்ளங்கி சந்தையில் 18 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாய தோட்டங்களில் விவசாயிகளிடம் ஒரு கிலோ முள்ளங்கியை ரூ. 4,ரூ.5 என வியாபாரிகளால் விலை கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் பல விவசாயிகள் முள்ளங்கிகளை பறிக்காமல் அப்படியே தோட்டத்தில் விட்டு விட்டனர். முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால் வேதனையடைந்த விவசாயி ராமமூர்த்தி தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த முள்ளங்கிகளை டிராக்டர் கொண்டு உழுது அழித்தார். இதில் சுமார் 15 டன் முள்ளங்கிகள் சேதமானதாக வேதனையுடன் தெரி வித்தார். 

    ×