என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி பழையபேட்டை  முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    கிருஷ்ணகிரி பழையபேட்டை முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
    • கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகங்கள் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை தர்மராஜா கோவில் சாலையில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதையொட்டி கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கொடி ஏற்றுதல், முதல் கால பூஜை, தீபாராதனை நடந்தது. அன்ற மாலை கணபதி பூஜை, இரண்டாம் காலயாக பூஜை ஆகியவை நடந்தது.

    27-ந் தேதி காலை கணபதி பூஜை, கலச பூஜை, விசேஷ மந்த்ர ஹோமங்கள்ஆகியவையும், மதியம் மூன்றாம் கால யாகம் நடந்தது.நேற்று நவகிரக ஹோமங்கள், 5-ம் கால பூஜைகள் நடந்தது- தொடர்ந்து கலச புறப்படுதல், முத்து மாரியம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சாமிக்குஅபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×