என் மலர்
கிருஷ்ணகிரி
- சிறுமி கடந்த 29-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.
- சிறுமியின் தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள அத்திகானூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார்.
இதனை நம்பி அந்த சிறுமி கடந்த 29-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அந்த சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது மகளை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்நகர மேடு பகுதியை சேர்ந்த ஜோதி மகன் சந்தோஸ் (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர்.
அப்போது அந்த சிறுமியை செய்யாறு பகுதிக்கு சந்தோஸ் கடத்தி சென்றது தெரியவந்தது.
உடனே செய்யாறு பகுதிக்கு நேற்று விரைந்து சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். பின்னர் சந்தோசை மத்தூருக்கு அழைத்து வந்தனர்.
இது தொடர்பாக போலீசார் சந்தோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கைதான அவரை கிருஷ்ணகிரி மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தீபா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- பல்வேறு இடங்களில் விசாரித்தும் தீபா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சேதுராவ் .இவரது மனைவி தீபா (வயது 21).கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தீபா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்தும் தீபா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து தீபாவின் பெற்றோருக்கு சேதுராவ் தெரிவித்தார்.அதன்பேரில் தீபாவின் தாய் ருக்குமணி தந்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தீபாவை தேடி வருகின்றனர்.
- ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 6ம் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் செல்வகுமார்தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 6ம் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரியில், மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், ஆறாம் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் செல்வகுமார்தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். செயலாளர்ரஹீப்ஜான் செயலர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் லட்சுமி நாராயணன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
ஓசூர் பெருமாள் மணிமேகலை குழுமத்தின் தலைவர் குமார் ஆண்டு விழா மலரைபெற்றுக் கொண்டார். தர்மபுரி மாவட்ட பணிநிறைவு வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலைவர் தங்கராசு, சேலம் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சங்க ஒருங்கிணைப்பா ளர்குணசேகரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சுப்ரமணியம், கிருஷ்ணகிரி நகர தலைவர் சுரேஷ்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ஜனார்தனராவ் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார். இணைச் செயலாளர் ரவி நன்றி கூறினார்.இக்கூட்டத்தில், ஓசூர் நகரத்தில் மழைக் காலத்தில் சாக்கடை நீர் செல்ல வழியின்றி சாலையில்சென்று பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி இதனை உடனே சரி செய்ய வேண்டும்.
சென்னை-பெங்களூர் சாலை, சேலம்- சென்னை சாலை சந்திக்கும் கிருஷ்ணகிரி ஆவின்மேம்பாலத்தின் கீழ் 24 மணி நேரமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்தி ற்குள்ளாகின்றனர். எனவே ஆவின் மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்துசிக்னல் அமைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம அகவிலைப்படி வழங்கியுள்ளது.அதே போல், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மாந்தோப்பில் ரோந்து சென்று சாராயம் விற்று வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
- 5 லிட்டர் சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜோகிப்பட்டி பகுதியில் சாராயம் விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் ரோந்து சென்று சாராயம் விற்று வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் ஜோகிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜசேகர் (வயது33) என தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து போச்சம்பள்ளி கோர்ட்டில் ராஜசேகரை ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- கடந்த 21-ந்தேதி இதேபோல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- குழந்தைகளையும் காணவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்து அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி செல்வி (வயது 26). இவர்களுக்கு சரண் (10), செஷாந்தி (8),அஜய் (4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 21-ந்தேதி இதேபோல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாதையன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.
அவர் திரும்பி வந்து பார்த்தபோது செல்வியையும், குழந்தைகளையும் காணவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்து அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.
இதையடுத்து உத்தரப்பள்ளியில் உள்ள செல்வியின் தாய் வீட்டுக்கு சென்று அங்கும் மாதையன் விசாரித்தார்.
ஆனால் அங்கும் செல்வி செல்லவில்லை. இது குறித்து செல்வியின் தந்தை முனியாண்டி (55) உத்தரப்பள்ளி போலீசில் புகார் செய்தார் .அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வியையும் அவரது குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.
- அவ்வழியாக வந்த லாரி ஒன்று ஜாகத் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட ஜாகத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் நகர் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா . இவரது மகன் ஜாகத் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று ஜாகத் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜாகத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
- அந்த லாரியை மத்தூர் போலீசாரிடம் கனிம வள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லம்பள்ளி பிரிவு சாலையில் கனிம வள அலுவலர் பொன்னுமணி தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்தது.
அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதை ஒட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
அந்த கற்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. கிரானைட் கற்களுடன் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியை மத்தூர் போலீசாரிடம் கனிம வள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த லாரி யாருடையது? தப்பி ஓடிய டிரைவர் யார்?என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் வீட்டில் கண்டித்துள்ளனர்.
- கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற சுஹைல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப்.இவரதுமகன் சுஹைல் (வயது 14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் வீட்டில் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற சுஹைல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து முகமது ஆசிப் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.
இதேபோல ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகரை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் மாயமானார்
.அவரை கடத்தி சென்று விட்டதாக அதே பகுதியை சேர்ந்த பிரபு (24) என்ற வாலிபர் மீது தரப்பட்ட புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல மத்திகிரி பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரும்,மத்தூர் பகுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவரும் மாயமான தாக தரப்பட்டுள்ள புகார்க ளின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வருகின்றனர்.
- “பவர் ஸ்டார்” என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் உயிரிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
- கர்நாடக எல்லையருகே உள்ள ஓசூரிலும் புனித் ராஜ்குமார் ரசிகர்கள், அவரது நினைவு நாளை அனுசரித்தனர்.
ஓசூர்,
கன்னட சினிமாவுலகில் கொடி கட்டி பறந்து, "பவர் ஸ்டார்" என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் உயிரிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனைத்து பகுதிகளிலும் அனுசரிக்கப்பட்டது. அதேபோல், கர்நாடக எல்லையருகே உள்ள ஓசூரிலும் புனித் ராஜ்குமார் ரசிகர்கள், அவரது நினைவு நாளை அனுசரித்தனர்.
இதையொட்டி, ஓசூர் அரசனட்டியில் நடந்த நிகழ்ச்சியில், புனித் ராஜ்குமாரின் பிரம்மாண்ட பேனர் மற்றும் உருவப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் நலத்திட்ட உதவிகளாக, 4 சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப் பெட்டிகள், மற்றும் 4 தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கடந்த 25-ந் தேதி தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் முருகர், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
ஓசூர்,
முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழா, கடந்த 25-ந் தேதி தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஸ்ரீ வேல்முருகன் ஆலயம், ஓசூர் என்.ஜி.ஜி.ஓ. காலனி மற்றும் பிருந்தவனம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் முருகர், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. . சூரசம்ஹாரத்திற்கு பின்னர் சாந்தி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மாலை, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
- அவ்வழியாக மொபட்டில் வந்த மர்ம நபர் சாவித்திரி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டான்.
- 2 மர்ம நபர்கள் சரண்யா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்.இவரது மனைவி சாவித்திரி (வயது 45).பூ விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் மோரணப்பள்ளி பகுதி வழியாக நடந்து சென்றார்.அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த மர்ம நபர் சாவித்திரி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டான்.
இதேபோல வெங்கடேசன் மனைவி சரண்யா (34) என்பவர் சித்தனஹள்ளி 3 ரோடு பகுதியில் நடந்து சென்றபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சரண்யா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
இது தொடர்பாக சாவித்திரியும், சரண்யாவும் கொடுத்த புகார்களின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
- பள்ளி மாணவிகள் ஹரிணி மற்றும் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் ஆகியோர் பாராட்டினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான பாரதியார் பிறந்த நாள் மற்றும் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்ட இறகுபந்து இரட்டையர் பிரிவில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஹரிணி மற்றும் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், செய லாளர் திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி, சரவணகுமார், துணைமுதல்வர் அபிநயா, கணபதிராமன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.






