என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதியமான் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை"

    • பள்ளி மாணவிகள் ஹரிணி மற்றும் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் ஆகியோர் பாராட்டினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான பாரதியார் பிறந்த நாள் மற்றும் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்ட இறகுபந்து இரட்டையர் பிரிவில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஹரிணி மற்றும் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், செய லாளர் திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி, சரவணகுமார், துணைமுதல்வர் அபிநயா, கணபதிராமன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    ×