என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பொதுமக்கள் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு மனு கொடுப்பதை போல் வந்தனர்.
    • வள்ளுவர்புரம் ஏரியில் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெலவர்த்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினமாக நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் செல்வராஜ், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டனி, வேளாண் அலுவலர் திருமால், கிராம சுகாதார செவிலியர் சுஜாதா உள்ளிட்ட அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

    அப்போது வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு மனு கொடுப்பதை போல் வந்தனர்.

    அவர்கள் மூட்டையை பிரித்து அதில் இருந்த குப்பையை அங்கு கொட்டினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊராட்சியில் சேரும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. அள்ளப்படும் குப்பைகளும் எம்.சி., பள்ளி சாலையில் உள்ள வள்ளுவர்புரம் ஏரியில் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ் கூறியதாவது:-குப்பைகள் அள்ளுவதற்கோ, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவோ போதிய நிதி அரசிடமிருந்து வருவதில்லை. அதனால்தான் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கிராம சபை கூட்டத்தில் புகார் மனுவிற்கு பதில், குப்பைகளை கொட்டி பொதுமக்கள் புகார் அளித்த சம்பவம் மகராஜகடை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தீபாவின் அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த ஆசாமி தீபாவின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்தான்.
    • இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் கேசவல்லன். இவரது மனைவி தீபா (வயது 38).இவர் மோரணப்பள்ளி ஜ ங்சன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    தீபாவின் அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த ஆசாமி தீபாவின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்தான். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    திருடு போன சங்கிலியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் என்று கூறப்படுகிறது.இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் குறித்து தீபா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

    • தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு, அத்திமுகம் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு, அத்திமுகம் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன், இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவியர்கள் ஒற்றுமை விளக்க பலகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் தலைமையில், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றனர்.

    • ரேஷன் அரிசிகளை மாவாக அரைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி பறக்கும் படையினர் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அதே பகுதியை சேர்ந்த சேகர், அசோக் ஆகியோர் வீட்டிலும் 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ளதால் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை சில சமூக விரோதிகள் குறைந்த விலைக்கு இங்கு கொள்முதல் செய்து அதனை ஆந்திர மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் கடத்தப்படுகிறது.

    அந்த அரிசி பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் மூட்டைகளில் பேக்கிங் செய்து மீண்டும் தமிழகத்தில் கொண்டு வந்து அதனை தரம் பிரித்து அதிக அளவில் விற்பனை செய்வதற்காகவும், மேலும் நிப்பெட் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ரேஷன் அரிசிகளை மாவுகளாக அரைத்து விற்பனை செய்வதாகவும் தகவல்கள் கிடைத்தன.

    அதன்பேரில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி உத்தரவின் பெயரில் தற்பொழுது மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அகரம் அருகே ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து அதனை மாவாக அரைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி பறக்கும் படை வட்டாட்சியர் இளங்கோ மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதில் அகரம் அருகே உள்ள நாகல்ஏரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருடைய வீட்டிலும் அதே பகுதியை சேர்ந்த சேகர், அசோக் ஆகியோர் வீட்டிலும் 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்து கைப்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு போச்சம்பள்ளியில் ஒப்படைத்தனர்.

    இந்த அரிசி பதுக்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத்துறைக்கு பறக்கும் படை தாசில்தார் புகார் அளித்துள்ளார்.

    • காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கஞ்சா செடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • தோட்டத்தில் மிளகாய் செடி பயிர்களுக்கு இடையே 5 அடி உயரமுள்ள தண்டு இலையுடன் கூடிய 4 பச்சை கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தொட்டமஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியூர் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது .

    அதன் பேரில் காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கஞ்சா செடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொட்டியூர் கிராமத்தை சேர்ந்த தொட்டையா வயது 35 அவருடைய தோட்டத்தில் மிளகாய் செடி பயிர்களுக்கு இடையே 5 அடி உயரமுள்ள தண்டு இலையுடன் கூடிய 4 பச்சை கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    அவற்றின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து தேடி வந்த நிலையில் காட்டில் பதுங்கியிருந்த தொட்டைய்யா வை கைது செய்து ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவிகளை, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் பாராட்டினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டிகள், கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும், 17வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்தனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவிகளை, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர், பாராட்டி வாழ்த்தினார்கள்.

    • சில நாட்களுக்கு முன்பு இவரை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாகவும் இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.
    • ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை குடும்பத்துடன் வந்து குமார் ஒப்படைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும் பல நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

    இதனால் கவுன்சிலர் தொடர்ந்து குமாருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், தொழில் ரீதியாக துன்புறுத்துவதாகவும், மேலும் தன்னை பார்க்க வரும் நண்பர்களை அவதூறாக பேசுவதும் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.

    பின்னர் சில நாட்களுக்கு முன்பு இவரை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாகவும் இதனால் மனமுடைந்து ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை குடும்பத்துடன் வந்து குமார் ஒப்படைத்தார். மேலும் கவுன்சிலர் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

    வட்டாட்சியர் அவரிடம் இந்த மனு தொடர்பாக ஊரில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தவறுகள் நடந்திருப்பது உறுதியாகும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.

    • இந்த மாணவிகளுக்கு அரசு விடுதியில் தங்கி படிக்க இடம் கிடைக்கவில்லை.
    • விடுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களும் நிறைந்துவிட்டது.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அங்கிநாயனப்பள்ளியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவிகளும் படித்து வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் படிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் சிலருக்கு, அரசு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டில் தங்களது கல்வியை கைவிடும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று 30-க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களது பெற்றோருடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதுநாடு, திருவண்ணமலை மாவட்டம் பீமாரப்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த எஸ்.டி, எஸ்.சி. மற்றும் எம்.பி.சி. வகுப்பை சேர்ந்த மாணவிகள் 30-க்கும் மே ற்பட்டவர்கள், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு அரசு விடுதியில் தங்கி படிக்க இடம் கிடைக்கவில்லை.

    விடுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களும் நிறைந்துவிட்டது. தற்போது மாணவிகள் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, விடுதியில் கூடுதலாக மாணவிகள் தங்க தேவையான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். இல்லாவிட்டால், இந்த ஆண்டில் மாணவிகள் கல்வியை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 165 கிலோ இருந்தது.ரூ.60,000 மதிப்பிலான அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே சிப்காட் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 165 கிலோ இருந்தது.ரூ.60,000 மதிப்பிலான அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை பொருட்களை பெங்களூ ருவிலிருந்து தென்காசிக்கு கடத்தி சென்ற தென்காசியை சேர்ந்த முத்துகிருஷ்ணபாண்டியன் (வயது 29),சிவா (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • துப்பாக்கியுடன் வேட்டையில் ஈடுபட முயன்ற ஒருவரை போலீசார் மடக்கி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
    • துப்பாக்கியை பயன்படுத்தி தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள வனப்பகுதிக்கு போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையில் ஈடுபட முயன்ற ஒருவரை போலீசார் மடக்கி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் சிட்டப்பா (வயது 48) என்ற கூலி தொழிலாளியாகிய அவர் இந்த துப்பாக்கியை பயன்படுத்தி தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஓசூரில் தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறவுள்ள கண்டன விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க.அவசர செயற்குழு கூட்டம், ஓசூரில் தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். மேலும், மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.முருகன், மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கூட்டத்தில் பேசினர்.

    இதில், இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறவுள்ள கண்டன விளக்க பொதுக்கூட்டம் குறித்தும்,

    மாநகரம், ஒன்றியம், பேரூர் பகுதிகளில் நடைபெறவிருக்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் குறித்தும்,கட்சி ஆக்கப்பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் கூட்டத்தில், மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர் நிர்வாகி கள், அணிகளின் அமைப்பாளர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    • செந்தில் தனது மனை வியுடன் வீட்டில் அருகில் உள்ள மாட்டு கொட்ட கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
    • பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள வீரமலைபுதூர் பகுதிைய சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செந்தில் (வயது32). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில் குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது 2 குழந்தை களையும் மட்டும் வீட்டில் தூங்க வைத்தார்.

    பின்னர் செந்தில் தனது மனை வியுடன் வீட்டில் அருகில் உள்ள மாட்டு கொட்ட கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்துள்ளனர்.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறக்க முயன்றனர். ஆனால் திறக்க முடியவில்லை. இதனால் பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    நேற்று அதிகாலை செந்தில் எழுந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் திட்டம் போட்டு இந்த கொள்ைள சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×