என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது.
    • குடியிருப்பு மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் தாலுக்கா ஜிகினியில், நந்தனவனா லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதியில் இரவு 10.30 மணியளவில் கரடி ஒன்று புகுந்தது.

    கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் குடியிருப்பு மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கரடியை பிடித்துச் செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர். மேலும், குடியிருப்பு மக்களும், அந்த பகுதியில் நடமாடுபவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள தொட்டூர் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன்(வயது 43).கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் முனிகிருஷ்ணனின் வியாதி சரியாகவில்லை.

    இதில் மனமுடைந்த அவர் கடந்த 28-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.மயங்கி கிடந்த

    அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து முனி கிருஷ்ணனின் மனைவி காந்தம்மாள் தந்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தலைவராம் பகுதியை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் திருமலேஷ் (43) என்பவரும் குடிப்பழக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தை ஏற்படுத்திய சிவபாரத் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
    • விபத்தை ஏற்படுத்தியவரும், இறந்தவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் அப்பு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தனுஷ் (வயது16). இவர் நேற்று இரவு இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவபாரத் (21) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தனுஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து சிவபாரத் மீண்டும் அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த புதுயுகம் மற்றும் அவரது மனைவி கவுரம்மாள் ஆகியோர் மீது மோதினார். இதில் அந்த தம்பதிகள் காயமடைந்தனர். இதனால் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றபோது தனுஷின் உறவினர்கள் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தப்பட்டு இறந்த தனுஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய சிவபாரத் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

    விபத்தை ஏற்படுத்தியவரும், இறந்தவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ராசுவிதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, தளவாய்பள்ளியை சேர்ந்த ஆனந்தராஜ், சுரேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவிதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, தளவாய்பள்ளியை சேர்ந்த ஆனந்தராஜ், விமல்ராஜ், சிஞ்சுப்பள்ளியை சேர்ந்த ஜெயபால், மேல்கரடிகுறி பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 2800 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அந்த கடையில் கடந்த 15-ந்தேதி அன்று மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • கல்லா பெட்டியில் இருந்த 300 பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவை எடுத்து சென்றனர். ஏ.டி.எம். கார்டில் ரூ.8 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அடுத்துள்ள பழையூர் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது39). இவர் காட்டிநாயக்கனப்பள்ளியில் டிப்பார்ட் மெண்ட் ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.

    அந்த கடையில் கடந்த 15-ந்தேதி அன்று மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லா பெட்டியில் இருந்த 300 பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவை எடுத்து சென்றனர். ஏ.டி.எம். கார்டில் ரூ.8 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர்.

    இது குறித்து ரகுபதி நேற்று மகாராஜா கடை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் ராணுவ வீரரான இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது.
    • நேற்று அப்பகுதியில் இறந்து கிடந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை பி.சி. நகர் பகுதிைய சேர்ந்தவர் அசோக்குமார். முன்னாள் ராணுவ வீரரான இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. இதனால் நேற்று அப்பகுதியில் இறந்து கிடந்தார். இது குறித்து மகாராஜாகடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீதா கடந்த 18-ந்தேதி அன்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள யு.குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கீதா (வயது35).

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கீதா கடந்த 18-ந்தேதி அன்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கு பீடி வாங்குவதற்காக 4 பேர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
    • அந்த மர்ம நபர்கள் 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் வெங்கடாசலம், பார்த்திபன் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் சென்னை செல்லும் சாலையில் வி.ஐ.பி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் பார்த்திபன் (வயது34). இவர் அப்பகுதியில் மளிகை, செல்போன் கடைகள் நடத்தி வருகிறார்.

    நேற்று மளிகை கடையில் தனது நண்பரிடம் வெங்கடாசலம் பேசி கொண்டிருந்தார். அங்கு பீடி வாங்குவதற்காக 4 பேர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனால் அந்த மர்ம நபர்கள் 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் வெங்கடாசலம், பார்த்திபன் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஓசூருக்கு மட்டும், சிறப்பு 2-ஆம் கட்ட திட்டமாக, ஒகேனக்கல்லில் இருந்து 1,050 கோடி ரூபாய் செலவில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
    • வருங்காலத்தில் முழுமையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது, ஓசூர் மாநகருக்கு கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி மாநகர சபை கூட்டம் நடைபெற்றது இதில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ்,மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா,மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் அரசனட்டி ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த கூட்டத்தில், வார்டு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைக்கு பதில் அளித்த மேயர் சத்யா, " ஓசூர் மாநகரத்திற்கு 60 எம். எல். டி.

    குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் புதிய திட்டம் வாயிலாக 6.5 எம்.எல்.டி குடிநீர் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. எனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது கூடுதலாக ரூ 4,000- கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஓசூருக்கு மட்டும், சிறப்பு 2-ஆம் கட்ட திட்டமாக, ஒகேனக்கல்லில் இருந்து 1,050 கோடி ரூபாய் செலவில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. ஆகவே வருங்காலத்தில் முழுமையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது, ஓசூர் மாநகருக்கு கிடைக்கும் என்று உறுதி அளித்தார். மேலும் 5-வது வார்டு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக மேயர் சத்யா மற்றும் ஆணையாளர் பாலசுப்ரமணியன் உறுதி அளித்தனர்.

    • நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர்.
    • குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சியில் சாக்கடை அடைப்பு தூர்வாரும் பணி, நகராட்சி தலைவர் முன்னிலையில் நடந்தது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வீடுகளுக்குள் மழை நீர் புகுவதை தடுக்க, சாக்கடை கால்வாய்களை தூர்வாரி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி நகராட்சியில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ள

    சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பரிதாநவாப் முன்னிலையில், நேற்று சேலம் சாலை, ஜக்கப்பன் நகர், பழைய சப்-ஜெயில் சாலை, பழையபேட்டை காந்தி சாலை, புதுப்பேட்டை மார்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பை எடுக்கும் பணி நடந்தது.

    மேலும், அப்பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நகராட்சி தலைவர் உத்தரவிட்டதையடுத்து, கொட்டும் மழையிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர்.

    தொடர்ந்து நகராட்சி துப்புரவு அலுவலர் ரமணச்சந்திரன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் உதவியகுமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மேலும், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சாக்கடை கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கிரில் கம்பி வலை போட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்றதும் சூதாடி கொண்டிருந்த கும்பலில் 3 பேர் ஓட்டம் பிடித்து விட்டனர்.
    • உமேஷ் (வயது 28),அபிஷ்குமார் (28), ஸ்ரீராம் (36) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள கன்னப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்றதும் சூதாடி கொண்டிருந்த கும்பலில் 3 பேர் ஓட்டம் பிடித்து விட்டனர்.

    உமேஷ் (வயது 28),அபிஷ்குமார் (28), ஸ்ரீராம் (36) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 880 பணம் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பணியிலிருந்த ஒரு நர்சின் தாய் இறந்துவிட்டதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சிவகுமார் (வயது 23). இவருடைய மனைவி வசந்தா (22). இவர்களுக்கு 3 வயதில் மோனிஷ் என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் வசந்தா 2-வதாக கர்ப்பமடைந்தார்.

    கடந்த 20-ந் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை அனுமதித்துள்ளனர். அன்று மாலை அவருக்கு சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஆனால் டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் மட்டுமே பிரசவம் பார்த்ததால் அந்த குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தையின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காமல், ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நர்சுகள் அனுப்பி வைத்ததாக. மேலும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.

    ஓசூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்த போது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்கேன் செய்தபோது, குழந்தையின் கையில் 3 இடங்களில் முறிவு ஏற்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து, கையில் கட்டு போட்டனர். மேலும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதார துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

    பிரசவத்தின்போது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். பணியிலிருந்த ஒரு நர்சின் தாய் இறந்துவிட்டதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.அவரிடமும் விசாரணை நடத்திய பிறகு தவறு இருந்தால் துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×