என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
    • பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏவுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். இதில், தலைமைக்கழக பேச்சாளர்கள் ஈரோடு இறைவன் திருப்பூர் கோவிந்தசாமி மற்றும் ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.

    இதில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ். சீனிவாசன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
    • போலீசார் தற்போது தலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக தற்போது இந்த ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    இந்த ஏரியில் நேற்று மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்த அந்த உடலை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பாகலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த உடலை மீட்டனர். அப்போது அந்த உடலில் இருந்து தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், கை மற்றும் கால்களில் ஆங்காங்கே வெட்டு காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த உடலை ஓசூர்

    அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக

    ஆய்வு செய்தனர். அப்பகுதியில் கொலை நடந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.

    இதனால் வேறு எங்கோ கொலை செய்து உடலை இந்த ஏரியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற னர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைத்தால் தான் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? போன்ற விவரங்கள் தெரியவரும்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் தற்போது தலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பாகலூர் பகுதியில் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஒரு நாள் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    • பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.

    கிருஷ்ணகிரி,

    பள்ளிக்கல்வித்து றையின் சார்பில், மாவட்ட அளவிலான அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் (ஸ்டெம்) குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை பயிற்சியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் நாராயணன் பயிற்சி குறித்து பேசினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், மாநில அளவிலான ஒருங்கி ணைப்பாளர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சேதுராமன், மாவட்டத் தலைவர் சர் ஜான், மாவட்ட செயலாளர் சந்தோஷ், இந்திய வளர்ச்சிக் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    வட்டாரக் கல்வி அலுவலர் ஜார்ஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்சு ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.

    ஸ்டெம் திட்டத்தின் பற்றிய அறிமுகம், செயல்பாடு, தொடர் பணிகள் போன்றவை பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. 

    • கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, விழா பேருரையாற்றுகிறார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சூளகிரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா சூளகிரி பஸ் நிலையத்தில் நடைபெறும் .

    நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்ப னப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.

    விழாவில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, விழா பேருரையாற்றுகிறார்.

    இதையொட்டி ஓசூர் மாநகர தெற்கு பகுதி சார்பில், பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் தலைமையில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில், சூளகிரி வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஓசூர் தெற்கு பகுதி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு கூட்ட நிகழ்ச்சி குறித்த நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

    கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், அச்செட்டிப்பள்ளி கூட்டுறவு சங்க தலைவர் கே.சாக்கப்பா, கிருஷ்ணன் மற்றும் தெற்கு பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாபெரும் கல்விக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.
    • தொழில் நுட்ப மாதிரிகளும் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் சாம்டெக் -2022 என்னும் தலைப்பில் மாபெரும் கல்விக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.

    கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அசோக் முன்னிலை வகிக்க கல்விக் கண்காட்சியை பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் ஓசூர் அதியமான் அறக்கட்டளை ஆலோசகரான முத்துச் செழியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    செயற்கை நுண்ணறிவியல், வணிகம், தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம், கணினி அறிவியல் துறை சார்ந்த கண்டுப்பிடிப்புகள், தொழில் நுட்ப மாதிரிகளும் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

    பெற்றோர், பொதுமக்கள் மற்றும் மற்ற பள்ளி மாணவ, மாணவியர் 2 நாட்களும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

    கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் அசோக், துணை முதல்வர் இம்மானுவேல் செல்வம் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லா மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    இளைய தலைமுறை யினர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நவீனகால வாழ்க்கையை தொலைத்து பாதிப்புக்குள்ளாகின்றனர். போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால் தனிநபர் மட்டுமல்லாமல் குடும்பம் மற்றும் சமுதாயத்தை பாதிக்கின்றது.

    பள்ளி கல்வித்துறை மூலம் மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் போதைக்கு அடிமை யானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மூலம் மறுவாழ்வுக்கான சமூக அந்தஸ்தை உருவாக்கி தர வேண்டும்.

    அதே போல மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் நகர்ப்புற, கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்க கூடாது. போதைப்பொருள் முற்றிலும் ஒழிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் பொதுமக்களிடையே கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களை போதைப்பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கை எறி பந்து போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலியிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
    • மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் கைதட்டி வரவேற்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அளவில் நடைபெற்ற 14 வயது மாணவ மாணவிகளுக்கான கை எறி பந்து போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலியிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் செங்கல்பட்டு மாநில அளவில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில் அவர்கள் பள்ளிக்கு வந்த போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் கைதட்டி வரவேற்றனர்.

    பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயேந்திரன் தலைமை வகித்தார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரம், ஆசிரியர்கள் பழனியப்பன், அகிலா, லோகநாதன், சத்தியசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார்,

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சவுந்தர்யா, பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பு ஆசிரியர்கள் லட்சுமி, சரளா, அனிதா, வித்யா, சுமதி, வான்மதி மற்றும் பள்ளி அலுலவக ஊழியர்கள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணவர்கள் கூறுகையில் எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உப கரணங்கள் இல்லாததால் எங்களால் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் எங்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

    எனவே எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை சீர்படுத்தி விளையாட்டு உபகரணங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கம் முன்வற வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    • ஆரம்ப காலத்தில் இந்த பூங்காவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
    • பூங்காவை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட மேடைகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் விதமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த பூங்காவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

    ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளிகளில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பார்ப்பதற்கு வாரம் அல்லது மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச்சென்று இந்த பூங்காவுக்கு வந்து பேசி மகிழ்ந்து விட்டு சென்றனர், ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பள்ளி விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளுடன் வந்து பாம்பாறு அணையை சுற்றிபார்க்கவும், பூங்காவில் அமர்ந்து உணவருந்தவும், பேசவும் மரங்களை சுற்றி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அமரும் திண்ணை இருந்தது. குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு பொம்மைகள், ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் இருந்தன. நிழல் தரும் மரங்கள், கண்கவரும் மலர்கள் கொண்ட செடிகள் இருந்தன. ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பாறு அணை பகுதியில் பூங்கா இருப்பதால் மக்களை கவரும் விதமாக பல்வேறு அம்சங்களோடு பூங்கா இருந்தது. பூங்காவிற்கு வரும் பொது மக்களிடம் பராமரிப்பு கட்டணமும், வாகனங்களுக்கு பாதுகாப்பு கட்டணங்களும் வசூலிக்கப்பட்டன.

    ஆனால் தற்போது பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது, பூங்காவில் உள்ள விளையாட்டு திடல் உபகரணங்கள் சிதிலமடைந்து கிடக்கிறது. பூச்செடிகள், மரங்கள் போதிய பராமரிப்பின்றி காய்ந்து கிடக்கிறது. பாம்பாறு அணையில் போதிய தண்ணீர் இருந்தும் மரங்கள் காய்ந்து கருகி வருகிறது. பூங்காவை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்ட மேடைகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனித்து பாம்பாறு அணை பகுதியில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொது

    மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த இரண்டு வருடங்களாக மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • மார்கணடேயன் நதி குறுக்கே கிராமங்களுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மனுக்களை அளித்துள்ளனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நெடுசாலை கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது.

    இந்த கிராமத்தில் மார்க்கண்டேயன் நதி மறுகரையில் ஜே.ஜே.நகர், கண்ணப்பன் கொட்டாய், முத்துராமன் கொட்டாய், தண்டு மாரியம்மன் கோவில், காட்டு மாரியம்மன் கோவில் மற்றும் ஒட்டுக்கொட்டாய் என 6 கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் என விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறன்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றி மார்கண்டேயன் நதி, குப்தா நதி, மற்றும் ஸ்வர்ணமிகை நதிகள் வந்து நெடுசாலை கிராமத்தில் கலக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளாக நதிகளில் நீர் இல்லாததால் கிராமமக்கள் ஆற்றில் இறங்கி பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் நெடுசாலை கிராமத்திலிருந்து மறுகரையில் உள்ள 6 கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அந்த கிராமங்களில் இருந்து கிராம மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    மேலும் மழைக்கா லங்களில் ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பதால் பொது மக்கள் அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்லவும் மற்றும் பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ மாணவிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் முதியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை அவசர காலத்திற்கு ஆற்றில் இறங்கி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது 1000 ஏக்கர் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயராக உள்ள நிலையில் ஆற்றில் நீர் உள்ளதால் எந்திரங்களை கூட கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியமால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    இது குறித்து பல முறை கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட கலெக்டரிடம் மூன்று நதிகள் கூடும் மார்கணடேயன் நதி குறுக்கே கிராமங்களுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மனுக்களை அளித்துள்ளனர்.

    ஆனால் இதுவரை மாவட்ட நடவடிக்கை எடுக்காததால் நேற்று நெடுசாலை கிராமத்தில் பெண்கள் உட்பட 6 கிராங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாலம் அமைப்பதற்கான பணிகள் அமைக்க நவடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தனுஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் அப்பு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தனுஷ் (வயது16). இவர் நேற்று இரவு இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவபாரத் (21) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக தனுஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து சிவபாரத் மீண்டும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த புதுயுகம் மற்றும் அவரது மனைவி கவுரம்மாள் ஆகியோர் மீது மோதினார். இதில் அவர்கள் காயமடைந்தனர். இதனால் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றபோது தனுஷின் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்டோர் குவிந்து போலீசாரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையின் கேட்டை பூட்டி ஆம்புலன்ஸ் செல்லாதவாறு தகராறில் ஈடுபட்டனர்.

    தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் (பொ), ஊத்தங்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு அமலா அட்வின், ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை அப்புறப் படுத்தப்பட்டு இறந்த தனுஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய சிவபாரத் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

    விபத்தை ஏற்படுத்தியவரும், இறந்த வரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஒரு ஏக்கர் சொந்தமாக வைத்து கொண்டு 3 ஏக்கர் 20 சென்டு உடனே மருத்துவ சேவைக்கு தானே வாரி வழங்கினார்.
    • கலெக்டர் ஜெயந்திரபானு ரெட்டியிடம் அனுசாகிப் குடும்பத்தார் போக்குவரத்து வழி கேட்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி பகுதியான சூளகிரி-கும்பளம் சாலையில் உள்ள சூளகிரி முஸ்லிம் தெருவில் வசித்து வருபவர் அனுசாகிப். இவர் மனைவி ஜெயன்நபி. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இப்பகுதிலேயே 4 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் பகுதியில் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொடை வள்ளலான தந்தை அனுசாகிப் 1969 ஆண்டு அரசு சார்பில் சூளகிரியில் மருத்துமனை கட்ட இடம் தேவைபடுகிறது. இடம் கொடுப்பிர்களா ? என அப்போதைய அதிகாரிகள் கேட்டதற்கு அவர் இடம் இருந்த 4 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் சொந்தமாக வைத்து கொண்டு 3 ஏக்கர் 20 சென்டு உடனே மருத்துவ சேவைக்கு தானே வாரி வழங்கினார். பின்பு காலங்கள் மாறி மருத்துவமனை கட்டிடங்கள் அதிகரிக்க மருத்துவமனை சுற்று சுவரும் கட்டி பாதையும் போட்டு கேட்டு போட்டனர்.

    பொதுவாக சுற்று சுவர் கட்டாத போது இந்த வழியாக அனுசாகிப் குடும்பத்தார் சென்று வந்த பாதை சுற்று சுவர் அமைத்து கேட்போட்டதால் அனுசாகிப் குடும்பத்தாருக்கு போக்குவரத்து வழியில்லாமல் பல ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் பலன் இல்லாமல் இருந்தது.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய கலெக்டர் வழி கொடுப்பதாக முன்வந்து பின்பு கிடப்பில் போட்டனர். தற்போது நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்கு வந்த மாவட்ட கலெக்டர் ஜெயந்திரபானு ரெட்டியிடம் அனுசாகிப் குடும்பத்தார் போக்குவரத்து வழி கேட்டனர். பார்த்து கொள்ளலாம் என கூறி சென்றார். பின்பு உறவினர்கள் கூறுகையில் இந்த இடம் தற்போது பல கோடிக்கு மதிப்பு பெற்ற இடமாகும். இதை அரசுக்கு கொடுத்து விட்டு போக்குவரத்திற்கு வழியில்லாமல் அவதிபட்டதை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது என கூறினர்.

    • மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர், 

    தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம், சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் சிவா தலைமை தாங்கினார். துணை தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் ஓசூர் கிளை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாவட்டத் தலைவர் சந்திரன் கலந்து கொண்டு கண்டனவுரையாற்றினார்.

    இதில் மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சியில் 35,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை 3,417 ஆக குறைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்தும், ஓசூர் மாநகராட்சியில் சுமார் 10 வருடங்களாக தற்காலிகமாக பணி செய்த 88 பேருக்கு பென்சன் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ×