என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளையாட்டு போட்டியில் சாதனை"
- கை எறி பந்து போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலியிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
- மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் கைதட்டி வரவேற்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அளவில் நடைபெற்ற 14 வயது மாணவ மாணவிகளுக்கான கை எறி பந்து போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலியிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் செங்கல்பட்டு மாநில அளவில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில் அவர்கள் பள்ளிக்கு வந்த போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் கைதட்டி வரவேற்றனர்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயேந்திரன் தலைமை வகித்தார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரம், ஆசிரியர்கள் பழனியப்பன், அகிலா, லோகநாதன், சத்தியசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார்,
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சவுந்தர்யா, பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பு ஆசிரியர்கள் லட்சுமி, சரளா, அனிதா, வித்யா, சுமதி, வான்மதி மற்றும் பள்ளி அலுலவக ஊழியர்கள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணவர்கள் கூறுகையில் எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உப கரணங்கள் இல்லாததால் எங்களால் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் எங்களால் கவனம் செலுத்த முடியவில்லை.
எனவே எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை சீர்படுத்தி விளையாட்டு உபகரணங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கம் முன்வற வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.