என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ வளாகத்தில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்த அனுசாகிப் குடும்பத்தினர்.
சூளகிரியில் அரசு மருத்துவமனை கட்ட இடம் கொடுத்துவிட்டு செல்வதற்கு பாதை இன்றி தவிக்கும் குடும்பத்தினர்
- ஒரு ஏக்கர் சொந்தமாக வைத்து கொண்டு 3 ஏக்கர் 20 சென்டு உடனே மருத்துவ சேவைக்கு தானே வாரி வழங்கினார்.
- கலெக்டர் ஜெயந்திரபானு ரெட்டியிடம் அனுசாகிப் குடும்பத்தார் போக்குவரத்து வழி கேட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி பகுதியான சூளகிரி-கும்பளம் சாலையில் உள்ள சூளகிரி முஸ்லிம் தெருவில் வசித்து வருபவர் அனுசாகிப். இவர் மனைவி ஜெயன்நபி. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இப்பகுதிலேயே 4 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் பகுதியில் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கொடை வள்ளலான தந்தை அனுசாகிப் 1969 ஆண்டு அரசு சார்பில் சூளகிரியில் மருத்துமனை கட்ட இடம் தேவைபடுகிறது. இடம் கொடுப்பிர்களா ? என அப்போதைய அதிகாரிகள் கேட்டதற்கு அவர் இடம் இருந்த 4 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் சொந்தமாக வைத்து கொண்டு 3 ஏக்கர் 20 சென்டு உடனே மருத்துவ சேவைக்கு தானே வாரி வழங்கினார். பின்பு காலங்கள் மாறி மருத்துவமனை கட்டிடங்கள் அதிகரிக்க மருத்துவமனை சுற்று சுவரும் கட்டி பாதையும் போட்டு கேட்டு போட்டனர்.
பொதுவாக சுற்று சுவர் கட்டாத போது இந்த வழியாக அனுசாகிப் குடும்பத்தார் சென்று வந்த பாதை சுற்று சுவர் அமைத்து கேட்போட்டதால் அனுசாகிப் குடும்பத்தாருக்கு போக்குவரத்து வழியில்லாமல் பல ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் பலன் இல்லாமல் இருந்தது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய கலெக்டர் வழி கொடுப்பதாக முன்வந்து பின்பு கிடப்பில் போட்டனர். தற்போது நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்கு வந்த மாவட்ட கலெக்டர் ஜெயந்திரபானு ரெட்டியிடம் அனுசாகிப் குடும்பத்தார் போக்குவரத்து வழி கேட்டனர். பார்த்து கொள்ளலாம் என கூறி சென்றார். பின்பு உறவினர்கள் கூறுகையில் இந்த இடம் தற்போது பல கோடிக்கு மதிப்பு பெற்ற இடமாகும். இதை அரசுக்கு கொடுத்து விட்டு போக்குவரத்திற்கு வழியில்லாமல் அவதிபட்டதை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது என கூறினர்.






