என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
- ராசுவிதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, தளவாய்பள்ளியை சேர்ந்த ஆனந்தராஜ், சுரேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவிதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, தளவாய்பள்ளியை சேர்ந்த ஆனந்தராஜ், விமல்ராஜ், சிஞ்சுப்பள்ளியை சேர்ந்த ஜெயபால், மேல்கரடிகுறி பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 2800 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story