என் மலர்
நீங்கள் தேடியது "விஷம் குடித்த பெண் சாவு"
- கீதா கடந்த 18-ந்தேதி அன்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள யு.குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கீதா (வயது35).
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கீதா கடந்த 18-ந்தேதி அன்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பதறி போன அவர் வீட்டிற்கு வருவதற்குள் வைத்தீஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று வைத்தீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அச்சல்பாடி அடுத்துள்ள குடுமியாம்பட்டி பகுதிைய சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி வைத்தீஸ்வரி (வயது48). இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளன.
இந்த நிலையில் தீபாவளி பண்டியையொட்டி அப்பகுதியில் சங்கர் இறைச்சி வியாபாரம் செய்து வந்தார். அப்போது வைத்தீஸ்வரி தனது கணவருக்கு போன் செய்தார். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் உடனே வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்தார். இதனால் பதறி போன அவர் வீட்டிற்கு வருவதற்குள் வைத்தீஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனால் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வைத்தீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
- சம்பவத்தன்று மன விரக்தியில் இருந்த உமா விஷம் குடித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொ ட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ்.
இவரது மனைவி உமா (வயது 30). இருவருக்கும் திருமணம் ஆகி 12 வருட ங்கள் ஆனநிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் உமா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சம்பவத்தன்று மன விரக்தியில் இருந்த உமா விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உமா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வீட்டில் தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது45) இவருக்கு நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சிவகாமி (வயது38). இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






