என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மாநகருக்கு வருங்காலத்தில்,  ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்  திட்டம் முழுமையாக கிடைக்கும்-  மேயர் சத்யா உறுதி
    X

    மாநகர சபை கூட்டத்தில், பிரகாஷ் எம்.எல்.ஏ பேசியபோது எடுத்த படம்.

    ஓசூர் மாநகருக்கு வருங்காலத்தில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமையாக கிடைக்கும்- மேயர் சத்யா உறுதி

    • ஓசூருக்கு மட்டும், சிறப்பு 2-ஆம் கட்ட திட்டமாக, ஒகேனக்கல்லில் இருந்து 1,050 கோடி ரூபாய் செலவில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
    • வருங்காலத்தில் முழுமையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது, ஓசூர் மாநகருக்கு கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி மாநகர சபை கூட்டம் நடைபெற்றது இதில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ்,மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா,மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் அரசனட்டி ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த கூட்டத்தில், வார்டு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைக்கு பதில் அளித்த மேயர் சத்யா, " ஓசூர் மாநகரத்திற்கு 60 எம். எல். டி.

    குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் புதிய திட்டம் வாயிலாக 6.5 எம்.எல்.டி குடிநீர் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. எனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது கூடுதலாக ரூ 4,000- கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஓசூருக்கு மட்டும், சிறப்பு 2-ஆம் கட்ட திட்டமாக, ஒகேனக்கல்லில் இருந்து 1,050 கோடி ரூபாய் செலவில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. ஆகவே வருங்காலத்தில் முழுமையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது, ஓசூர் மாநகருக்கு கிடைக்கும் என்று உறுதி அளித்தார். மேலும் 5-வது வார்டு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக மேயர் சத்யா மற்றும் ஆணையாளர் பாலசுப்ரமணியன் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×