என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த செந்தில் வீட்டையும், உள்படம் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதையும் படத்தில் காணலாம்.
போச்சம்பள்ளி அருகே துணிகரம்: கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
- செந்தில் தனது மனை வியுடன் வீட்டில் அருகில் உள்ள மாட்டு கொட்ட கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
- பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள வீரமலைபுதூர் பகுதிைய சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செந்தில் (வயது32). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில் குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது 2 குழந்தை களையும் மட்டும் வீட்டில் தூங்க வைத்தார்.
பின்னர் செந்தில் தனது மனை வியுடன் வீட்டில் அருகில் உள்ள மாட்டு கொட்ட கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்துள்ளனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறக்க முயன்றனர். ஆனால் திறக்க முடியவில்லை. இதனால் பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
நேற்று அதிகாலை செந்தில் எழுந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் திட்டம் போட்டு இந்த கொள்ைள சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






