என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்"

    • ரேஷன் அரிசிகளை மாவாக அரைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி பறக்கும் படையினர் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அதே பகுதியை சேர்ந்த சேகர், அசோக் ஆகியோர் வீட்டிலும் 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ளதால் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை சில சமூக விரோதிகள் குறைந்த விலைக்கு இங்கு கொள்முதல் செய்து அதனை ஆந்திர மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் கடத்தப்படுகிறது.

    அந்த அரிசி பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் மூட்டைகளில் பேக்கிங் செய்து மீண்டும் தமிழகத்தில் கொண்டு வந்து அதனை தரம் பிரித்து அதிக அளவில் விற்பனை செய்வதற்காகவும், மேலும் நிப்பெட் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ரேஷன் அரிசிகளை மாவுகளாக அரைத்து விற்பனை செய்வதாகவும் தகவல்கள் கிடைத்தன.

    அதன்பேரில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி உத்தரவின் பெயரில் தற்பொழுது மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அகரம் அருகே ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து அதனை மாவாக அரைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி பறக்கும் படை வட்டாட்சியர் இளங்கோ மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதில் அகரம் அருகே உள்ள நாகல்ஏரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருடைய வீட்டிலும் அதே பகுதியை சேர்ந்த சேகர், அசோக் ஆகியோர் வீட்டிலும் 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்து கைப்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு போச்சம்பள்ளியில் ஒப்படைத்தனர்.

    இந்த அரிசி பதுக்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத்துறைக்கு பறக்கும் படை தாசில்தார் புகார் அளித்துள்ளார்.

    ×