என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் பிருந்தாவனம் நகரில் உள்ள முருகன் கோவிலில், 5-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று, அம்பாளிடமிருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்வுநடந்த போது எடுத்த படம்.
ஓசூர் முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி
- கடந்த 25-ந் தேதி தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் முருகர், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
ஓசூர்,
முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழா, கடந்த 25-ந் தேதி தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஸ்ரீ வேல்முருகன் ஆலயம், ஓசூர் என்.ஜி.ஜி.ஓ. காலனி மற்றும் பிருந்தவனம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் முருகர், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. . சூரசம்ஹாரத்திற்கு பின்னர் சாந்தி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மாலை, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.






