என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய்த்துறை பொதுக்குழு கூட்டம்"

    • ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 6ம் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் செல்வகுமார்தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் மாவட்ட ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 6ம் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரியில், மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், ஆறாம் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் செல்வகுமார்தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். செயலாளர்ரஹீப்ஜான் செயலர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் லட்சுமி நாராயணன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

    ஓசூர் பெருமாள் மணிமேகலை குழுமத்தின் தலைவர் குமார் ஆண்டு விழா மலரைபெற்றுக் கொண்டார். தர்மபுரி மாவட்ட பணிநிறைவு வருவாய்த்துறை அலுவலர் சங்கத் தலைவர் தங்கராசு, சேலம் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சங்க ஒருங்கிணைப்பா ளர்குணசேகரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சுப்ரமணியம், கிருஷ்ணகிரி நகர தலைவர் சுரேஷ்

    ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ஜனார்தனராவ் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார். இணைச் செயலாளர் ரவி நன்றி கூறினார்.இக்கூட்டத்தில், ஓசூர் நகரத்தில் மழைக் காலத்தில் சாக்கடை நீர் செல்ல வழியின்றி சாலையில்சென்று பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி இதனை உடனே சரி செய்ய வேண்டும்.

    சென்னை-பெங்களூர் சாலை, சேலம்- சென்னை சாலை சந்திக்கும் கிருஷ்ணகிரி ஆவின்மேம்பாலத்தின் கீழ் 24 மணி நேரமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்தி ற்குள்ளாகின்றனர். எனவே ஆவின் மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்துசிக்னல் அமைக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம அகவிலைப்படி வழங்கியுள்ளது.அதே போல், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×