என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பெண்களிடம் 4 பவுன் நகை பறிப்பு"

    • அவ்வழியாக மொபட்டில் வந்த மர்ம நபர் சாவித்திரி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டான்.
    • 2 மர்ம நபர்கள் சரண்யா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்.இவரது மனைவி சாவித்திரி (வயது 45).பூ விற்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் மோரணப்பள்ளி பகுதி வழியாக நடந்து சென்றார்.அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த மர்ம நபர் சாவித்திரி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டான்.

    இதேபோல வெங்கடேசன் மனைவி சரண்யா (34) என்பவர் சித்தனஹள்ளி 3 ரோடு பகுதியில் நடந்து சென்றபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சரண்யா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

    இது தொடர்பாக சாவித்திரியும், சரண்யாவும் கொடுத்த புகார்களின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

    ×