search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே 6 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக   விளை நிலத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அழித்த அதிகாரிகள்  -கால அவகாசம் கேட்டும் வழங்கவில்லை என விவசாயிகள் வேதனை
    X

    ஓசூர் அருகே 6 வழி சாலை பணிக்காக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ள காட்சி.

    ஓசூர் அருகே 6 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக விளை நிலத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அழித்த அதிகாரிகள் -கால அவகாசம் கேட்டும் வழங்கவில்லை என விவசாயிகள் வேதனை

    • விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது.
    • அவசர, அவசரமாக விளை நிலங்களில் நெற்ப யிற்களை அழிப்பது நியாயம்தானா? எனவும் கேள்வி.

    ஓசூர்,

    பெங்களூர் விமான நிலையம் முதல் ஓசூரை சுற்றி எஸ்.டி.ஆர் ஆர். என்னும் சேட்டிலைட் ரிங்ரோடு, 21 கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமையவுள்ளது.சேட்டிலைட் ரிங்ரோடு அமைக்க திட்ட மதிப்பீடு முடிந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில்,ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தில் 6 வழிச்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் தற்போது விவசாயிகள் நெற்பயிரிட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தின் மூலம் சாலை பணிகளுக்காக, நெல்வயலில் பயிர்களை அழித்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயிகள் அறுவடைக்காக 1 மாத கால அவகாசம் கேட்டும், அதிகாரிகள் சிறிதும் செவி சாய்க்காமல் பயிர்களை அழித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சாலை பணிகளை தொடங்கவே, இன்னும் பல மாதங்களாகும் என கூறப்படும் நிலையில், அவசர, அவசரமாக விளை நிலங்களில் நெற்ப யிற்களை அழிப்பது நியாயம்தானா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள விவசாயிகள், அறுவடைக்கு பிறகு பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×