என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாவட்ட மாநாட்டுக்கு, மாவட்ட துணைத்தலைவர் சங்கரய்யா தலைமை தாங்கினார்.
    • துணை ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.ஐடி.யு.சி தொழிற்சங்கத்தின் 2-வது மாவட்ட மாநாடு, ஓசூரில் நடைபெற்றது. முன்னதாக, ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகம் அருகே, ஏ.ஐ.டி.யு.சி மாநில தலைவரும், திருப்பூர் எம்.பி.யுமான கே.சுப்பராயன் கொடியேற்றி வைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து ஒசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி 2-வது மாவட்ட மாநாட்டுக்கு, மாவட்ட துணைத்தலைவர் சங்கரய்யா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் எம்.கே.மாதையன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.

    சுப்பராயன் எம்.பி., மாநில செயலாளர் ஆறுமுகம் ஆகியார் வாழ்த்தி பேசினார்கள்.மாவட்ட தலைவரும், தளி எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில்,ஓசூர் சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைககளில் தொடர்ந்து 480 நாட்கள் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்ளுக்கு பணி நிரந்தரம் செய்வேண்டும் என்று மாநாட்டில் தீர்மான நிறைவேற்றப்பட்டது.

    ஓசூர் அருகே கெலமங்க லம் பகுதியில் தற்போது இயங்கி வரும் டாட்டா நிறுவனத்தின் முதல் அலகில், மாவட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அதே போல் டாட்டா மொபைல் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும்போது, பணியமர்த்தவுள்ள 60,000 தொழிலாளர்களில் தமிழக இளைஞர்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்றும், ஓசூரில் தொழிலாளர் துறையின் துணை ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

    • தக்காளி தோட்டத்தில் புகுந்து தக்காளி செடிகளை நாசம் செய்துள்ளது.
    • விவசாயிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தமிழக எல்லை பகுதியான எப்ரி மற்றும் நேரலகிரி வனபகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    கடேகவுண்டனுர் பகுதியில் இரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த முனியப்பன் என்பவரது தக்காளி தோட்டத்தில் புகுந்து தக்காளி செடிகளை நாசம் செய்துள்ளது. தக்காளி தோட்டத்தை காட்டு யானைகள் நாசம் செய்திருப்பதை கண்டு முனியப்பன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் சுமார் 20,000 ரூபாய் மதிப்பிலான தக்காளி செடிகள் நாசம் அடைந்தது. இதை அடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ள 7 காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வேறு வனபகுதிக்கு வரட்டும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மீண்டும், மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருவது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் பீதி ஏற்படுத்தியுள்ளது.மேலும் காட்டு யானைகள் ஊருக்கு அருகில் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டி உள்ள சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்.
    • தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள மிட்டப்பள்ளி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது52).

    இவர் இன்று காலை வீட்டில் துணிகளை துவைத்தார். பின்னர் அந்த துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த கம்பியின் மீது துணிகளை காய போட்டார். அப்போது வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது ஈரத்துணி பட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் எதிர்பாராத விதமாக கிருஷ்ணவேணி மீது பாய்ந்தது. இதனை அறிந்த ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்கார பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணவேணியின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • முன்னாள் எம்.எல்.ஏ.கிருஷ்ண மூர்த்தியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட அவைத்தலைவராக ஸ்ரீராமுலு, மாவட்ட இணைசெயலாளராக கிருஷ்ணவேணி,துணை செயலாளர்களாக மது (எ) ஹேம்நாத், தமிழ்செல்வி, பொருளாளராக வெங்க டேஷ், ஜெயலலிதா பேரவை செயலாளராக ராதா. கார்த்திக், இளைஞர் அணி மாவட்ட செயலாளராக மணிகண்டன், மகளிரணி செயலாளராக மோகனா, மாணவரணி செயலாளராக மோகன், அண்ணா தொழில் சங்க செயலாளராக பாபு, மீனவரணி செயலாளராக சின்னசாமி, மருத்துவரணி செயலாளராக நாகேஷ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக பிரதீப், பொதுக்குழு உறுப்பினர்களாக நாகரெத்தினம், சகாதேவன், ராமு,சத்தியநாராயணன், தொகுதி அமைப்பாளர்களாக செல்வராஜ், வெங்கடாச்சலம், சரவணன், ராஜேந்திரன், ஆறுமுகம், சீனிவாசன், ஒன்றிய செயலாளர்களாக மகிலன்,ஐயப்பன்,வடிவேல்,தமோதிரன்,சுப்பிரமணி , பிரேம்குமார்,ஆறுமுகம், கோவிந்தராஜ்,முனியப்பன், நாகராஜன், அழகேசன், திம்மராயப்பா, நாகராஜ், பாண்டுரங்கன், கிருஷ்ணகிரி நகர செயலா ளராக செல்வம், ஓசூர் மேற்கு பகுதி செயலாளராக வேல்முருகன், வடக்கு பகுதி செயலாளராக உமாசங்கர், தெற்குப்பகுதி செயலாளராக ரவி, கிழக்கு பகுதி செயலாளராக கோபி, பர்கூர் பேரூர் செயலாளராக திம்மராயன், தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளராக வெங்கடேஷ்,தலைமை கழக பேச்சாளராக விநாயகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அறிவிக்கப் பட்டுள்ள புதிய நிர்வாகிகள் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜை முன்னாள் எம்.எல்.ஏ.கிருஷ்ண மூர்த்தியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • மருத்து வத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த மினி மாரத்தான் போட்டி.
    • கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்து வத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.

    இதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதா ரத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள், ரெட்கிராஸ் சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் என 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி ராயக்கோட்டை மேம்பாலம், பெத்ததாளப்பள்ளி, தாலுகா போலீஸ் நிலையம் சென்று மீண்டும் ராயக்கோட்டை சாலை வழியாக கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறை வடைந்தது.

    பின்னர், இந்த போட்டியில் முதல் பரிசு வென்ற எலத்தகிரி மாணவர் ஜார்ஜ், இரண்டாம் பரிசு பெற்ற பாலக்கோடு மாணவர் பெருமாள், மூன்றாம் பரிசு பெற்ற வி.மாதேப்பட்டி மாணவர் மேகநாதன், பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற உமாவதி, இரண்டாம் பரிசு பெற்ற பிரியா, மூன்றாம் பரிசு பெற்ற டாக்டர்.சங்கீதா ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழகளும், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

    மேலும், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.முதுகானப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது. அத்துடன் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, பெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்டேடியம், 7.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும்.
    • நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகரில் விளையாடுவதற்கென்று உள்ள விளையாட்டு மைதானம், தளி சாலையில் உள்ள அந்திவாடி ஸ்டேடியம் ஆகும். இந்த ஸ்டேடியம், 7.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும்.

    இந்த ஸ்டேடியத்தை ஒட்டி, சுமார் 45 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அந்திவாடி ஸ்டேடியத்தையும், அருகில் உள்ள அரசு நிலத்திலும் அனைத்து விளையாட்டு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில், திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அதே பகுதியில் 1 ஏக்கர் நிலத்தில் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், திட கழிவுகள் பிரிக்கும் கட்டிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பகுதியில் அந்த கட்டிடம் கட்டப்பட்டால் துர்நாற்றம் வீசுவதுடன் மட்டுமல்லாமல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக உருவாக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    எனவே, இந்த பகுதியில் திட கழிவுகள் பிரிக்கும் கட்டிடம் கட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், நடைபாதை பயிற்சியாளர்கள் சங்க தலைவர் மல்லேஷ், செயலாளர் லிங்கம் ஆகியோர் தலைமையில் விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சியாளர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
    • சிமெண்ட் சாலை அமைக்க அடுத்த முறை நிதி ஒதுக்கப்படும் என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில், 2022–-2023-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது மக்கள் எம்.எல்.ஏ.,விடம், ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் ஆழ்துளைக் கிணறு மூழ்கி கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் இல்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் கிராமத்திற்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. எனவே சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., விரைவில் குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலையை உயர்த்தி சிமெண்ட் சாலை அமைக்க அடுத்த முறை நிதி ஒதுக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்சாயத்து துணைத் தலைவர் லட்சுமி மோகன், ஒன்றிய துணை செயலாளர்கள் குமரேசன், சரவணன், கவுன்சிலர்கள் மகேந்திரன், சங்கீதா சரவணன், முன்னாள் கிளை செயலாளர் வீரபத்திரன், ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடேசன், கிளை செயலாளர்கள் சாம்ராஜ், செல்வம் காட்டி நாயனப்பள்ளி துணைத் தலைவர் நாராயணகுமார், ஒப்பந்ததாரர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில் கிராமத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
    • தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள மருதேரி தென்பெண்ணையாற்றில் வீரமலை பஞ்சாயத்து கரடியூர் கிராம மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக மருதேரி ஆற்றில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உறை கிணறு அமைக்கப்பட்டு இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில் கிராமத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மருதேரி உயர் மட்ட ஆற்றுப்பாலத்தின் மீது செல்லும் இரும்பு குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விண்ணை நோக்கி பாய்கிறது. அவ்வாறு பாயும் தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. இதனால் வீரமலை கிராம மக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த குழாய் உடைப்பு ஏற்பட்டு இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    எனவே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கம்பன் கழக விழா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., செல்லக்குமார் விருது வழங்கி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கம்பன் கழகம் சார்பில், ஏழாம் ஆண்டு கம்பன் கழக விழா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. பொருளாளர் ஸ்ரீரங்கன் வரவேற்றார். நில எடுப்பு துணை ஆணையாளர் சக்திவேல் மற்றும் கம்பன்கழக நிறுவனத் தலைவர் ரவிந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர். கம்பன் கழக விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ்

    எம்.பி., செல்லக்குமார் விருது வழங்கி பாராட்டினார்.

    ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனர் திருமால் முருகன், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற இணைச் செயலாளர் சிவராஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கம்பன் கழக இணைச் செயலாளர் தமிழ் திருமால் கம்பன் குறித்து சிறப்புரை ஆற்றினார். தீயணைப்பு நிலைய அலுவலர் மார்டின், என்னைக் கவர்ந்த நாயகன் ராவணன் என்ற தலைப்பில் பேசினார். இந்நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் தனபால், உதயநிலவு கலைக்கூடம் உதயநிலவு, நேரு இளையோர் மையம் அப்துல்காதர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
    • தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள மிட்டப்பள்ளி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது52).

    இவர் இன்றுகாலை வீட்டில் துணிகளை துவைத்தார். பின்னர் அந்த துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த கம்பியின் மீது துணிகளை காய போட்டார். அப்போது வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது ஈரத்துணிபட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணவேணி மீது பாய்ந்தது.

    இதனை அறிந்த ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்காரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பத்தூர் மாவட்ட போலி சாமியாரால் பெண் ஏமாற்றப்பட்டதால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மத்தூர் போலீசார் நளினியிடம் தெரிவித்தனர்.
    • சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்டம் காந்திலி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    மத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த, நரவந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நளினி (வயது45). இவர் நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் நளினி வீடு வழியே சென்ற சாமியார் ஒருவர் நளினியிடம் வீட்டில் யாரோ செய்வினை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதில் ஏமாந்து போன நளினி செய்வினை எடுக்க வேண்டும். ஆடு பலியிட வேண்டும் என பலவற்றை கூறி மூளை சலவை செய்துள்ளார்.

    இதனால் கடந்த 6 மாதங்களாக சிறுக, சிறுக சேர்த்து வைத்த ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் மற்றும் நகைகளை அந்த போலி சாமியாரிடம் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட போலி சாமியார் தொடர்ந்து தோஷம் கழிக்க வேண்டும் என பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும் நளினியின் வீட்டில் கஷ்டம் தீர்ந்தபாடில்லை. சாமியாரை தொடர்பு கொண்டு கேட்க போன் செய்த போதெல்லாம் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நளினியை தொடர்பு கொண்ட போலி சாமியார் சிறப்பு பூஜை ஒன்று செய்ய வேண்டும். அதற்காக ஆடு மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வேண்டுமென்பதால், உடனடியாக ரூபாய் பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு மத்தூர் பேருந்து நிலையம் வரவேண்டும் என கூறியுள்ளார்.

    இந்த தகவல் அறிந்த நளினியின் மகன் மற்றும் அவரின் நண்பர்கள் நேற்று மத்தூரில் பணத்துக்காக காத்திருந்த போலி சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலி சாமியார் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த, செங்குட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் (47) என்பது தெரிய வந்தது.

    இவர் இதே போல் பல பெண்களை சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமத்தில் ஏமாற்றி பணம் பறித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனது சொந்த காரில் சென்று கிராமத்தின் வெளியே காரை நிறுத்திவிட்டு கிராமத்தினுள் நடந்து சென்று குடும்ப பெண்களிடம் தோஷம் இருப்பதாக கூறி நம்பவைத்து ஏமாற்றுவதும் தெரிய வந்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்ட போலி சாமியாரால் பெண் ஏமாற்றப்பட்டதால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மத்தூர் போலீசார் நளினியிடம் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்டம் காந்திலி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    • ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வாசகங்களடங்கிய அரசு உத்தரவின்படி அனைவரும் உறுமொழி ஏற்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் இந்திய அரசியலமைப்பு குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, வார்டு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உறுதி மொழியை ஏற்று கொண்டனர்.

    இதில் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, நம்முடைய அரசியலமைப்புப் பேரவையில், ஈங்கிதனால், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம். என்று வாசகங்களடங்கிய அரசு உத்தரவின்படி அனைவரும் உறுமொழி ஏற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சரவணன் செய்திருந்தார்.

    ×