search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பனப்பள்ளி அருகே  தக்காளி தோட்டத்தில் புகுந்து நாசம் செய்த காட்டு யானைகள்
    X

    காட்டு யானைகளால் நாசமான தக்காளி தோட்டம்.

    வேப்பனப்பள்ளி அருகே தக்காளி தோட்டத்தில் புகுந்து நாசம் செய்த காட்டு யானைகள்

    • தக்காளி தோட்டத்தில் புகுந்து தக்காளி செடிகளை நாசம் செய்துள்ளது.
    • விவசாயிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தமிழக எல்லை பகுதியான எப்ரி மற்றும் நேரலகிரி வனபகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    கடேகவுண்டனுர் பகுதியில் இரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த முனியப்பன் என்பவரது தக்காளி தோட்டத்தில் புகுந்து தக்காளி செடிகளை நாசம் செய்துள்ளது. தக்காளி தோட்டத்தை காட்டு யானைகள் நாசம் செய்திருப்பதை கண்டு முனியப்பன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் சுமார் 20,000 ரூபாய் மதிப்பிலான தக்காளி செடிகள் நாசம் அடைந்தது. இதை அடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ள 7 காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வேறு வனபகுதிக்கு வரட்டும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மீண்டும், மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருவது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் பீதி ஏற்படுத்தியுள்ளது.மேலும் காட்டு யானைகள் ஊருக்கு அருகில் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டி உள்ள சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×