search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே  மருதேரி தென்பெண்ணை ஆற்றுப்பால குடிநீர் குழாய் உடைப்பு  -வீணாக ஆற்றில் கலக்கும் தண்ணீர்
    X

    போச்சம்பள்ளி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடி தண்ணீர்.

    போச்சம்பள்ளி அருகே மருதேரி தென்பெண்ணை ஆற்றுப்பால குடிநீர் குழாய் உடைப்பு -வீணாக ஆற்றில் கலக்கும் தண்ணீர்

    • பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில் கிராமத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
    • தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள மருதேரி தென்பெண்ணையாற்றில் வீரமலை பஞ்சாயத்து கரடியூர் கிராம மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக மருதேரி ஆற்றில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உறை கிணறு அமைக்கப்பட்டு இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில் கிராமத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மருதேரி உயர் மட்ட ஆற்றுப்பாலத்தின் மீது செல்லும் இரும்பு குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விண்ணை நோக்கி பாய்கிறது. அவ்வாறு பாயும் தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. இதனால் வீரமலை கிராம மக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த குழாய் உடைப்பு ஏற்பட்டு இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    எனவே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×