என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் பாய்ந்து பெண் பலி"

    • துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்.
    • தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள மிட்டப்பள்ளி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது52).

    இவர் இன்று காலை வீட்டில் துணிகளை துவைத்தார். பின்னர் அந்த துணிகளை காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த கம்பியின் மீது துணிகளை காய போட்டார். அப்போது வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது ஈரத்துணி பட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் எதிர்பாராத விதமாக கிருஷ்ணவேணி மீது பாய்ந்தது. இதனை அறிந்த ரங்கநாதன், தனது மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்கார பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த கிருஷ்ணவேணியின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×