search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாடா நிறுவனத்தின் முதல் அலகில்  கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை   -ஓசூரில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம்
    X

    மாநாட்டில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பேசியபோது எடுத்த படம்.

    டாடா நிறுவனத்தின் முதல் அலகில் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை -ஓசூரில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம்

    • மாவட்ட மாநாட்டுக்கு, மாவட்ட துணைத்தலைவர் சங்கரய்யா தலைமை தாங்கினார்.
    • துணை ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.ஐடி.யு.சி தொழிற்சங்கத்தின் 2-வது மாவட்ட மாநாடு, ஓசூரில் நடைபெற்றது. முன்னதாக, ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகம் அருகே, ஏ.ஐ.டி.யு.சி மாநில தலைவரும், திருப்பூர் எம்.பி.யுமான கே.சுப்பராயன் கொடியேற்றி வைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து ஒசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி 2-வது மாவட்ட மாநாட்டுக்கு, மாவட்ட துணைத்தலைவர் சங்கரய்யா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் எம்.கே.மாதையன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.

    சுப்பராயன் எம்.பி., மாநில செயலாளர் ஆறுமுகம் ஆகியார் வாழ்த்தி பேசினார்கள்.மாவட்ட தலைவரும், தளி எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில்,ஓசூர் சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைககளில் தொடர்ந்து 480 நாட்கள் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்ளுக்கு பணி நிரந்தரம் செய்வேண்டும் என்று மாநாட்டில் தீர்மான நிறைவேற்றப்பட்டது.

    ஓசூர் அருகே கெலமங்க லம் பகுதியில் தற்போது இயங்கி வரும் டாட்டா நிறுவனத்தின் முதல் அலகில், மாவட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அதே போல் டாட்டா மொபைல் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும்போது, பணியமர்த்தவுள்ள 60,000 தொழிலாளர்களில் தமிழக இளைஞர்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்றும், ஓசூரில் தொழிலாளர் துறையின் துணை ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    Next Story
    ×